உலக சுகாதார அமைப்பை விரக்தியடைய வைத்த பணக்கார நாடுகளின் அந்த செயல்!

corona vaccine

அடுத்து வரும் 2 மாதங்களுக்காவது தங்கள் மக்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை பணக்கார நாடுகள் நிறுத்தி வைக்க வேண்டும்

  • Share this:
கொரோனா தொற்று உலக மக்களை பல வேரியன்ட்கள் மூலம் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. எனவே தங்கள் குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளில் பல நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன. தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வேரியன்ட்களிடமிருந்து தப்பிக்க சில நாடுகள் தங்களது குடிமக்களுக்கு பூஸ்டர் டோஸ் என்றழைக்கப்படும் மூன்றாம் டோஸ் தடுப்பூசி வழங்கும் பணிகளை முன்னெடுத்து செயல்படுத்தி வருகின்றன. இதனிடையே இந்தியா உட்பட இன்னும் பல நாடுகளில் மக்கள் முழுமையாக இன்னும் தடுப்பூசிகள் எடுத்து கொள்ளவில்லை.

1% அல்லது 2% மக்கள் மட்டுமே தடுப்பூசி போட்டு கொண்டுள்ள நாடுகளும் இருப்பதால், தடுப்பூசி ஏற்றத்தாழ்வை சுட்டிக்காட்டி தடுப்பூசி போட்டு கொள்ளும் மக்கள் எண்ணிக்கையின் விகிதங்களை உயர்த்த முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஹங்கேரி உட்பட பல நாடுகளும், ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் உள்ள மற்ற நாடுகளும் ஏற்கனவே தங்கள் மக்களுக்கு COVID-19 பூஸ்டர் ஷாட்களை வழங்கி வருகின்றன அல்லது வழங்க திட்டமிட்டுள்ளன.

Also Read: ஆப்கனுக்கு உக்ரைன் மக்களை மீட்கச் சென்ற பயணிகள் விமானம் ஈரானுக்கு கடத்தல்!

இந்நிலையில் ஹங்கேரி தலைநகரான புடாபெஸ்டில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ், கோவிட்-19 பூஸ்டர் ஷாட்களை தற்போது கொடுக்க துவங்கி உள்ள நாடுகள் இந்த திட்டத்தை சற்று தாமதப்படுத்த வேண்டும் என்று மீண்டும் கேட்டு கொண்டுள்ளார். உலகில் இருக்கும் அத்தனை கோடி மக்களும் பாதுகாப்பான நபராக மாறும் வரை, தனிப்பட்ட யாவரும் நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று கூறி கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், உலகளவில் தடுப்பூசி விகிதங்கள் அதிகரிக்கப்படாவிட்டால், கொரோனா வைரஸின் வலுவான வேரியன்ட்கள் உருவாகலாம். எனவே இந்த நிலைமை ஏற்படாமல் தடுக்க தற்போது பூஸ்டர் ஷாட்களாக கருதப்படும் தடுப்பூசிகளை முதல் அல்லது இரண்டாவது டோஸ் எடுத்து கொள்ளாத மக்கள் உள்ள நாடுகளுக்கு பூஸ்டர் ஷாட்களை கொடுக்கும் நாடுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதனால் பல நாடுகள் தங்களின் முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசி கவரேஜை அதிகரித்து கொள்ள முடியும் என்றார். அதே போல பூஸ்டர் ஷாட்கள் பயனுள்ளதா என்பது பற்றி ஒரு விவாதம் இருக்கிறது என்பதையும் சுட்டி காட்டினார்.

Also Read:   தாலிபான்களுக்கு சிம்மசொப்பனமாக திகழும் பஞ்ஷிர் நாயகன் சரண் அடைகிறாரா?

நோயெதிர்ப்பு அமைப்பில் குறைபாடு கொண்டவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டிருந்தாலும் கூடுதலாக ஒரு பூஸ்டர் ஷாட் பெற வேண்டும் என்று சில ஐரோப்பிய நாடுகள் மூன்றாம் டோஸ் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இருப்பினும் பூஸ்டர் ஷாட் கட்டாயம் போட்டு கொள்ள வேண்டும் என்ற தேவை உள்ள மக்களின் எண்ணிக்கை அதிகம் இல்லை. எனவே குறைந்தபட்சம் அடுத்து வரும் 2 மாதங்களுக்காவது தங்கள் மக்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை பணக்கார நாடுகள் நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன்னதாக தற்போதைய தரவுகள் கோவிட் -19 பூஸ்டர் ஷாட்கள் உடனடியாக தேவை என்பதை குறிக்கவில்லை என்று WHO தெரிவித்திருந்தது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டெட்ரோஸ், ஏராளமான நாடுகள் இன்னும் தங்களை மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி வழங்க முடியாமல் தவித்து கொண்டிருக்கும் சூழலில், சில பணக்கார நாடுகள் தங்களை மக்களை பூஸ்டர் ஷாட் போடா ஊக்குவிப்பது தம்மை விரக்தியடைய செய்துள்ளது என்றார். எனவே மூன்றாம் டோஸாக பயன்படுத்தும் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக கொடுக்கலாம் என்றும் யோசனை தெரிவித்துள்ளார்.
Published by:Arun
First published: