• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • "கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும்" நீண்ட காலத்திற்கு பிறகு ஒப்புக்கொண்ட உலக சுகாதார மையம்!

"கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும்" நீண்ட காலத்திற்கு பிறகு ஒப்புக்கொண்ட உலக சுகாதார மையம்!

கொரோனா

கொரோனா

WHO , கொரோனா வைரஸ் உட்புற அல்லது மோசமான காற்றோட்ட அமைப்புடைய இடத்தில் பரவுவதற்கான சாத்தியம் உள்ளது என்பதை ஒப்புக் கொண்டுள்ளது.

  • Share this:
கொரோனா தொற்றுநோய் உலக நாடுகளை ஆட்டிப்படைக்க ஆரம்பித்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. ஆனால் கண்ணுக்கு தெரியாத வைரஸ் எவ்வாறு மற்றவர்களுக்கு பரவுகிறது என்பது பற்றிய கடுமையான விவாதம் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. கொரோனா பாதித்த ஒருவருடன் நெருங்கிய தொடர்பு கொள்வதால் கொரோனா பரவுகிறது என்று கூறப்பட்டது.

கொரோனா மேற்பரப்புகளில் நீண்ட நாட்கள் உயிர்வாழும் என்பதால், பலர் தொடும் மேற்பரப்புகளை தொடுவதன் மூலம் வைரஸ் பரவும் மேலும் காற்றின் மூலம் பரவும் என பல காரணங்கள் சொல்லப்பட்டது. ஆனால் எதுவும் அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

இதனால், சமூக விலகல் மற்றும் முகக்கவசங்கள் கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டது. தற்போது உலக சுகாதார நிறுவனம், இந்த வார தொடக்கத்தில் வெளியிட்ட சமீபத்திய வழிகாட்டுதல்கள் மூலம், கொரோனா வைரஸ் உட்புற அல்லது மோசமான காற்றோட்ட அமைப்புடைய இடத்தில் பரவுவதற்கான சாத்தியம் உள்ளது என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. WHO வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களில் குறிப்பிட்டுள்ளதாவது, "தற்போதைய சான்றுகள் மூலம் வைரஸ் முக்கியமாக ஒருவருக்கொருவர் நெருங்கிய தொடர்பில் இருந்தால் அதாவது ஒரு மீட்டருக்கும் குறுகிய தூரத்தில் இருந்தால் பரவும்.ஏனெனில் வைரஸைக் கொண்ட ஏரோசோல்கள் அல்லது நீர்த்துளிகளை உள்ளிழுக்கப்படும் போதும் அல்லது கண்கள், மூக்கு அல்லது வாயுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும்போதும் ஒரு நபருக்கு தொற்று ஏற்படலாம்" என்று கூறியுள்ளது. மேலும் "வைரஸ் மோசமான காற்றோட்டம் கொண்ட அல்லது நெரிசலான உட்புற அமைப்புகளிலும் பரவக்கூடும். அதுபோன்ற பகுதிகளில் மக்கள் அதிக நேரம் செலவிட முற்பட்டால் கொரோனா பரவல் அதிகரிக்கிறது. ஏனென்றால் ஏரோசோல்கள் காற்றில் நீண்ட நேரத்திற்கு உயிருடன் இருக்கின்றன. அதேபோல காற்றில் சுமார் 1 மீட்டர் மேல் பயணிக்கின்றன" என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீவிர சோர்வு, விவரிக்க முடியாத உடல் பலவீனம் : கொரோனா ஆரம்பகால அறிகுறிகளில் அலட்சியம் காட்டாதீர்கள்

WHO வெளியிட்ட சமீபத்திய அப்டேட், COVID-19 எவ்வாறு பரவுகிறது என்பதைப் பற்றிய மேம்பட்ட மற்றும் வைரஸ் காற்றின் மூலம் பரவும் என்பதை புரிந்துகொள்ளும்படியான மற்றொரு பிரதிபலிப்பாகும். கொரோனா பரவ ஆரம்பித்த முதல் வாரங்கள் மற்றும் மாதங்களில், வைரஸால் பாதிக்கப்படாத நபர்களுக்கு முகக்கவசங்களை அணிய WHO அறிவுறுத்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது. மேலும் அப்போதிலிருந்தே, முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக தொலைதூர நெறிமுறைகளை கடைபிடித்தல் ஆகியவை வைரஸ் பரவுவதை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என WHO அறிவுறுத்தி வந்தது நமக்கு தெரியும்.

ஆனால் கொரோனா பரவல் குறித்து முன்னர் கூறப்பட்ட காரணங்களை விட, காற்றின் மூலம் பரவுதல் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருந்திருக்கக்கூடும் என்பதை ஒப்புக் கொள்ள WHO ஏன் இவ்வளவு காலம் எடுத்தது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் உலகின் முன்னணி மருத்துவ அமைப்பின் வழிகாட்டுதல்களைத் திருத்தி COVID-19 ஐ ஒரு ஏர்போன் (காற்றில் பரவும்) நோயாக அறிவிக்க வேண்டும் என சர்வதேச சுகாதார வல்லுநர்கள் குழுவினர் WHO-க்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.அந்த நேரத்தில், சாத்தியத்தை நிராகரிக்க முடியாது என்று WHO குறிப்பிட்டிருந்தாலும், காற்றில் பரவுவதற்கான சான்றுகள் முடிவில்லாமல் இருந்ததாக பின்னர் கூறியது. ஆனால், தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு புதிய மதிப்பீட்டின்படி WHO அதன் வழிகாட்டுதல்களை தற்போது திருத்தி வெளியிட்டுள்ளது. அந்த மதிப்பீட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கான முதன்மை வழி காற்று தான் என்பதைக் குறிக்க வலுவான சான்றுகள் உள்ளன என்று குறிப்பிட்டிருந்தது.

லான்செட்டில் வெளியிடப்பட்ட ஆய்வில், சூப்பர்-ஸ்ப்ரெடர் நிகழ்வுகளில் வைரஸ் படவும் முறை முதல் உலகளாவிய அளவில் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் பரவுவதற்கு அறிகுறியற்ற அல்லது தாமதமாக அறிகுறியை பெறும் நோயாளிகள் தான் காரணம் என்பதற்கான அதிகரிக்கும் ஆதாரங்கள் வரை காற்றின் மூலம் பரவுவதற்கான பத்து வெளிப்படையான உதாரணங்களை ஆராய்ச்சியாளர்கள் பட்டியலிட்டனர். அதேபோல மற்றொரு எம்ஐடி ஆய்வில், பரவலாகப் பேசப்படும் ஆறு-அடி தூர சமூக விலகல் விதி இனி செல்லுபடியாகாது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மாரடைப்பு அதிகரிப்பு - எச்சரிக்கும் மருத்துவர்கள்

இதற்கு என்ன அர்த்தம்..?

முன்னர் நினைத்ததை விட நீண்ட தூரம் பயணிக்கும் திறன் வைரஸுக்கு இருக்கிறது என்பதற்கான சாத்தியக்கூறுகள், தற்போதுள்ள தடுப்பு நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க தாக்கங்களைக் காட்டாயம் ஏற்படுத்தும் என்பது தான். அதாவது, ஈர்ப்பு விசையின் விளைவாக தரையில் விழுவதற்கு முன்பு வைரஸ் நீர்துளிகளால் குறுகிய தூரம் மட்டுமே பயணிக்க முடியும் என்று முன்னர் நம்பப்பட்டது.

உண்மையில், வைரஸ் காற்றின் மூலம் பரவும் என்றால், காற்றோட்டத்திற்கு இப்போது அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். அதாவது வீடு அல்லது அலுவலகங்கள் போன்ற உட்புற அமைப்புகளில் இருக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டும். அதேபோல், கொரோனா பாதிக்கப்பட்ட வீட்டு உறுப்பினர் ஒரு குறிப்பிட்ட அறையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் கூட, அனைத்து குடும்ப உறுப்பினர்களும் வீட்டிற்குள் முகவசங்களை அணிய வேண்டும் என்ற மத்திய அரசின் வழிகாட்டுதல்களை கடைபிடிப்பதும் முக்கியம் .

ஏரோசோலைஸ் செய்யப்பட்ட வைரஸ் காற்று நீரோட்டங்கள் வழியாக அதிக தூரம் பயணிக்க முடிந்தால், வழக்கமான சமூக தொலைதூர விதிமுறைகள் இனி பயனுள்ள நடவடிக்கைகளாக செயல்படாது. எனவே காற்றோட்டம் குறைவாக இருக்கும் இடத்தில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: