HOME»NEWS»CORONAVIRUS-LATEST-NEWS»which hand will use to take corona vaccine ghta tmn

2 கொரோனா தடுப்பூசிகளை ஒரே கையில் போட்டுக்கொள்ளலாமா? மருத்துவ நிபுணர்கள் கூறுவது என்ன?

ஒரு வருடமாக மக்களை திண்டாட வைத்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பூசியை எடுத்துக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கான விடைகள் இதோ..

2 கொரோனா தடுப்பூசிகளை ஒரே கையில் போட்டுக்கொள்ளலாமா? மருத்துவ நிபுணர்கள் கூறுவது என்ன?
காட்சிப் படம்
  • Share this:

அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் புழக்கத்தில் வந்துள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். இருப்பினும் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்வது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் மக்களிடையே நிலவுகிறது. அது தொடர்பாக மருத்துவர்கள் அளித்து விளக்கங்கள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

கொரோனா தடுப்பூசிகள் இரு கட்டங்களாக எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது புண் ஏற்படுவது சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக புண் ஏற்படுகிறது? இது ஆபத்தானதா? என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த கேள்விக்கு பதில் அளித்து கொலம்பியாவைச் சேர்ந்த மருத்துவர் சஞ்சீவ் ஜெயின், தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் போது கையில் புண் ஏற்படுவது சாதாரணமான ஒன்று என கூறியுள்ளார். தடுப்பூசி செலுத்தியவுடன் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் வைரஸை எதிர்த்து போராடுவதற்கு தயாராகும் எனத் தெரிவித்துள்ள அவர், அதற்காக கிடைக்கும் சக்தியை கிரகித்துக்கொள்ள செல்கள் முற்படும்போது, தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் வீக்கம் ஏற்படுவதாக கூறியுள்ளனர்.

தடுப்பூசியை எந்த கையில் எடுத்துக்கொள்வது என பலருக்கும் சந்தேகம் இருந்து வருகிறது. ஆனால், இந்த கேள்விக்கு மருத்துவர்களிடம் கூட பதில் இல்லை. மருத்துவர் ஜெயின் கூறும்போது, எந்தக் கையில் வேண்டுமானாலும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம், சிறந்த கை என்று எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார். ஒரு சில மருத்துவர்கள், அதிகம் பயன்படுத்தாத கையில் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம், ஏனென்றால் உங்கள் வேலைகளுக்கு அவை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என கூறியுள்ளனர். இன்னும் சில மருத்துவர்கள், அதிகம் வேலை இருக்கும் கையில் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என கூறியுள்ளனர்.



காரணம், அதிகம் வேலை இருக்கும் கையில் தடுப்பூசி எடுத்துக்கொண்டால் வீக்கமும், புண்ணும் சீக்கிரம் குணமாகும் என்றார். தடுப்பூசியால் ஏற்பட்ட புண்ணும், வீக்கமும் சில நாட்கள் இருக்கும் எனக் கூறியுள்ள முருத்துவர்கள், ஐஸ் கட்டியை அந்த இடத்தில் வைத்து எளிதாக குணப்படுத்தலாம் என அறிவுறுத்தியுள்ளனர். ஒரே கையில் ஏற்கனவே தடுப்பூசி எடுத்துக்கொண்டவர், மீண்டும் அதே கையில் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதில் அளித்துள்ள நிபுணர்கள், ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்ட கையில் மீண்டும் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் எந்த பாதிப்பும் இல்லை என கூறியுள்ளனர்.

அவரவர் மன நிலையை பொறுத்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்வது என மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதனால், தடுப்பூசி தொடர்பான அச்சம் இருந்தால், அதனை விடுத்து தைரியமாக ஒரே கையில் இருமுறை தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம். மேலும், கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் புண் மற்றும் வீக்கம் குறித்து மக்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. சில நாட்களில் சரியாகிவிடும்.
Published by:Tamilmalar Natarajan
First published: