Sputnik V : ரஷ்ய தடுப்பூசி ஸ்புட்னிக் வி எப்போது இந்தியா வரும்?

Sputnik V : ரஷ்ய தடுப்பூசி ஸ்புட்னிக் வி எப்போது இந்தியா வரும்?

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி

ரஷ்ய தடுப்பூசி ஸ்புட்னிக் வி இந்தியாவுக்கு எப்போது வரும் என்ற தகவலை ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை செயல் அதிகாரி கிரில் டிமிட்ரிவ் தெரித்துள்ளார்.

  • Share this:
    ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரஷ்யா உருவாக்கியது. அங்குள்ள கமலேயா தேசிய தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசியை ரஷ்யா நேரடி முதலீட்டு நிதியம் தயாரித்து வழங்குகிறது.

    இந்தியாவில் இந்த ஸ்புட்னிக் வி தடுப்பூசியை மருத்துவ பரிசோதனை செய்து, வினியோகிக்கும் உரிமையை ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கையெழுத்தானது.

    அந்த ஒப்பந்தத்தின் படி, ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் 10 கோடி டோஸ்களை வினியோகிக்க வழிவகை செய்யப்பட்டது. பின்னர் இது 12.5 கோடி டோஸ்களாக அதிகரிக்கப்பட்டது. இந்தியா சமீபத்தில், இந்த கொரோனா தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளித்தது.

    ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவில் எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இதுபற்றி டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பதிலில், “இந்த தடுப்பூசியின் முதல் தொகுப்பை நிதியாண்டின் முதல் காலாண்டில் பெறுவதுதான் எங்களின் இலக்கு. மே மாத இறுதிக்குள் அவற்றை பெறுவதற்கு முடிந்த வரை முயற்சி செய்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

    ரஷ்யாவில் இருந்து இந்த தடுப்பூசியானது ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்திடம் இருந்து, மைனஸ் 18 முதல் மைனஸ் 22 டிகிரி உறை நிலையில் இறக்குமதி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து, ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை செயல் அதிகாரி கிரில் டிமிட்ரிவ் ஏற்கனவே, “இந்த கோடை காலத்திற்குள் இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் 5 கோடி டோஸ் தயாரிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் தொகுப்பு மே 1ஆம் தேதிக்குள் இந்தியாவுக்கு வரும் என கிரில் டிமிட்ரிவ் கூறியுள்ளார். இந்தியாவில் 5 மருந்து நிறுவனங்களுடன் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாரிப்பு தொடர்பாக ஒப்பந்தம் செய்துள்ளது.

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நோய் பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்தியாவில் 14 கோடியே 52 லட்சம்பேரி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

    Must Read :  இந்தியாவில் கணிசமாக குறைந்த கொரோனா தொற்று... பொதுமக்கள் ஆறுதல்

     

    கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. தேவையான உபகரணங்கள் உற்பத்தி செய்யப்பட்டும், இறக்குமதி செய்யப்பட்டு விருகின்றன. கொரோனா சிகிச்சைக்குத் தேவையான ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதால், பற்றாக்குறைப் போக்குவதற்கான பல்வேறு ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. அதன்படி, ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க உள்நாட்டில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.
    Published by:Suresh V
    First published: