ஹோம் /நியூஸ் /கொரோனா /

தமிழகத்தில் கொரோனோ தடுப்பூசி எப்போது போடப்படும்- அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

தமிழகத்தில் கொரோனோ தடுப்பூசி எப்போது போடப்படும்- அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

அமைச்சர் விஜயபாஸ்கர்

அமைச்சர் விஜயபாஸ்கர்

வேக்ஸின் வரும் வரை முகக்கவசம்தான் நமக்கு ஆயுதம் என தெரிவித்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இலவச கொரோனோ தடுப்பூசி செலுத்துவதற்காக 8881 மையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது எனவும், கொரோனோ தடுப்பூசி போடுவதன் ஒத்திகைக்காக 6 லட்சம் முன்கள பணியாளர்கள் தேர்வு செய்து, ஜனவரி 2 ம் தேதி முதல் செலுத்தப்பட இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் "முக கவசம் உயிர் கவசம்" விழிப்புணர்வு முயற்சியாக பிரம்மாண்ட முக கவசம் மாதிரியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் திறந்துவைத்தார். மேலும் முக கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கையேட்டை மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயாஸ்கர், ‘கொரோனோ தடுப்பு பணியில் தமிழ்நாடு உலகத்திற்கே முன்மாதிரியாக’ இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். சுகாதாரத்துறைக்கு 2020 மறக்கமுடியாத ஆண்டாக அமைந்தது. உயிர்பயத்தை காட்டிய கொரோனோவிற்கு எதிராக மிகச்சிறப்பாக செயல்பட்டிருக்கிறோம். 2021 பாதுகாப்பான ஆண்டாக அமையும் என நம்புகிறோம்.

இலவச கொரோனோ தடுப்பூசி செலுத்துவதற்காக 8881 மையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கொரோனோ தடுப்பூசி போடுவதன் ஒத்திகைக்காக 6 லட்சம் முன்கள பணியாளர்கள் தேர்வு செய்து ஜனவரி 2 முதல் தொடங்கவுள்ளோம்.

லண்டனிலிருந்து வந்த பொதுமக்கள் முகவரி மாற்றிக்கொடுத்ததன் காரணமாக அவர்களை கண்டுபிடிப்பது சவாலாக இருப்பதாகவும் 1554 பேர் லண்டனிலிருந்து வந்தவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் என கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

வேக்ஸின் வரும் வரை முகக்கவசம்தான் நமக்கு ஆயுதம் என தெரிவித்துள்ளார். மேலும், கொரோனோ தடுப்பூசி கூடிய விரைவில் தமிழகத்தில் செலுத்தப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அம்மா கிளீனிக் திட்டம் பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பு பெற்றிருப்பதாக தெருவித்ததுடன் 2000 புதிய மருத்துவர்கள், 2000 புதிய செவிலியர்கள், 2000 புதிய உதவியாளர்கள் என 6000 புதிய மருத்துவ ஊழியர்களை நியமிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்றுவருவதாக தெரிவித்தார்.

Published by:Suresh V
First published:

Tags: Corona vaccine, Covid-19 vaccine, Minister Vijayabaskar