Vaccination : கொரோனா பாதித்து மீண்டவர்களுக்கு எப்போது தடுப்பூசி?

கொரோனா தடுப்பூசி

கொரோனா தொற்று பாதித்து அதில் இருந்து மீண்டவர்கள் எவ்வளவு நாட்களுக்குப் பிறகு தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்கலாம் என்பது குறித்து மத்திய அரசுக்கு சிறப்புக்குழு பரிந்துரை செய்துள்ளது.

  • Share this:
    எதிர்ப்பு சக்தி குறித்து ஆராயும் தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவான இந்த பரிந்துரையை அரசுக்கு அளித்துள்ளது. முன்னதாக தொற்று பாதித்து அதிலிருந்து மீண்டோருக்கு 6 மாதங்கள் கழித்து தடுப்பூசி செலுத்தலாம் என்று இந்த குழு அரசுக்கு தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் கால அவகாசத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டித்தால் எதிர்ப்பு சக்தி மேலும் அதிகரிக்கிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய மற்றும் உலகளாவிய தரவுகளின் அடிப்படையில் இந்த பரிந்துரையை செய்வதாக அக்குழு மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.

    அதில், கொரோனா பாதித்து அதில் இருந்து மீண்டோருக்கு, 9 மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்கலாம் என மத்திய அரசுக்கு சிறப்புக்குழு பரிந்துரைத்துள்ளது.

    Must Read : உ.பி அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு; நோய்த்தொற்றால் பலியாகும் 3வது அமைச்சர்

     

    இந்நிலையில், தமிழகத்தில் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்க இருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: