கொரோனா தொற்றை விட வதந்தி தொற்று அதிகமாகிவிட்டது - வாட்ஸ் அப் அதிரடி நடவடிக்கை

கொரோனா தொற்றை விட வதந்தி தொற்று அதிகமாகிவிட்டது - வாட்ஸ் அப்  அதிரடி நடவடிக்கை
  • Share this:
கொரோனா வைரஸ் தொற்றை விட அது குறித்த வதந்தி, போலி செய்திகள் அதிகம் பரவுவதால், அதனை கட்டுப்படுத்த வாட்ஸ் அப் செயலி, பயனர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதாவது, வழக்கமாக ஃபார்வேர்ட் செய்யப்படும் தகவல்கள் ஒரே நேரத்தில் 5 பேருக்கு அனுப்ப முடியும். ஆனால், புது கட்டுப்பாடுகளின்படி, ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே ஃபார்வேர்ட் செய்ய முடியும். இதன் மூலம், போலி செய்திகள், வதந்திகள் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்று வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.

புதிதாக அனுப்பப்படும் தகவல்கள் ஒரே நேரத்தில் 5 பேருக்கு அனுப்பலாம். ஆனால், மற்றவர்கள் ஃபார்வேர்ட் செய்த தகவலை மீண்டும் பலருக்கு ஃபார்வேர்ட் செய்யும்போதுதான் புது நிபந்தனை கட்டுப்படுத்தும்.


ஏற்கெனவே, பலருக்கு ஒரே நேரத்தில் ஃபார்வேர்ட் செய்யும் வசதியை கட்டுப்படுத்தி, ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே ஃபார்வேர்ட் செய்யும் வசதி கொண்டு வந்த பிறகு, ஃபார்வேர்ட் செய்யும் தகவல்களின் போக்கு 25 % குறைந்தது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப் செயலியை இந்தியாவில் 40 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள். உலகம் முழுவதும் 200 கோடி அளவை கடந்துள்ளது.

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.First published: April 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading