ஹோம் /நியூஸ் /கொரோனா /

வீட்டில் இருக்கும் போது கோவிட் நோயாளிகளுக்கு திடீரென ஆக்ஸிஜன் அளவு குறைந்தால் என்ன செய்யலாம்?

வீட்டில் இருக்கும் போது கோவிட் நோயாளிகளுக்கு திடீரென ஆக்ஸிஜன் அளவு குறைந்தால் என்ன செய்யலாம்?

காட்சிப் படம்

காட்சிப் படம்

இதற்கு முன் இல்லாத வகையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் பெரும்பாலான நோயாளிகளுக்கு ‘மூச்சுத் திணறல்’ ஒரு பொதுவான அறிகுறியாக உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்து வரும் கோவிட்-19 பாதிப்புகளுக்கு மத்தியில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல் நாடு தத்தளித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவு கொரோனா பாதிப்புகள் உச்சம் தொட்டுள்ளதால் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதே போல இதற்கு முன் இல்லாததை வகையில் தொற்றால் பாதிக்கப்படும் பெரும்பாலான நோயாளிகளுக்கு ‘மூச்சுத் திணறல்’ ஒரு பொதுவான அறிகுறியாக உள்ளது.

தரவுகளை வைத்து பார்க்கும் போது கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலைக்கு இடையில் இறப்பு சதவீதத்தில் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. ஆனால் இரண்டாவது அலையில் அதிக ஆக்சிஜன் தேவை இருப்பதாக ICMR DG-யான டாக்டர் பால்ராம் பார்கவா கூறியுள்ளார்.

இதற்கு காரணம் புதிதாக மாற்றமடைந்த வைரஸை பொறுத்தவரை அவை மூச்சுக் குழாயின் துவக்கத்தில் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. இதனால் பலருக்கு சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் அவசர தேவை எங்கேனும் இருந்தால் சொல்லுங்கள் என்று மக்களிடம் உதவி கேட்கும் செய்திகளால் ட்விட்டர் நிரம்பி வழிகிறது. இதனிடையே பல நோயாளிகள் மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் வீட்டு தனிமைப்படுத்தலில் இருகின்றனர். இவர்கள் உடலில் இருக்கும் ஆக்சிஜன் அளவுகளில் ஏற்படும் மாற்றம் அல்லது ஆக்சிஜன் குறைவது உள்ளிட்ட அறிகுறிகளை கண்காணிக்கும் நிலையில், இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அதற்கான எளிய தீர்வு உடலை வைத்திருக்கும் நிலையாக கூட இருக்கலாம்.

எய்ம்ஸ் பாட்னாவால் வெளியிடப்பட்ட கோவிட் -19 க்கான சமீபத்திய ஸ்டாண்டர்ட் ஆப்பரேட்டிங் புரோஸிஜர் (எஸ்ஓபி)-ல், ரத்த ஆக்ஸிஜன் அளவை நிர்வகிக்க புரோன் பொசிஷனிங்கை( prone positioning) பயன்படுத்துவதை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். புரோன் பொசிஷன் என்பது குறிப்பிட்ட நேரம் குப்புறபடுப்பது, பின் வலதுபுறம் படுப்பது சிறிது நேரத்திற்கு பின் உட்கார்ந்து விட்டு இடது புறமாக படுப்பது இறுதியாக மீண்டும் குப்புறபடுப்பது. முகத்தை கீழே வைத்து, மார்பை உயர்த்தி, விரைவான சுவாசத்தை பயிற்சி செய்வதும் இதில் அடங்கும். இது ‘புரோன் வென்டிலேட்டர் முறை’ என்றும் அழைக்கப்படுகிறது மற்றும் ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்துகிறது. இப்படி செய்வதால் சுவாச பிரச்சனையை சமாளிக்க முடியும்.

நுரையீரல் முன், நடுத்தர மற்றும் பின்புறம் என 3 பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒருவர் முதுகு கீழே இருக்கும்படியும், மார்பு மேலே இருக்கும்படியும் படுக்கும் போது ரத்த ஓட்டம் பின்னால் அதிகமாக இருக்கும். முன்னால் குறைவாக இருக்கிறது. புரோன் நிலையில் ஒருவர் படுக்கும் போது இதயம் மார்பக எலும்பில் தங்கியிருந்து நுரையீரலை விரிவாக்குவதற்கு இடமளிக்கிறது, காற்றோட்டம் அதிகரித்து ரத்த ஓட்டம் அதிகமாகிறது. பொதுவாக COVID-க்கு முன் கடும் சுவாச கோளாறு உள்ள நோயாளிகளுக்கும், வென்டிலேட்டரிலும் இது செய்யப்பட்டது. நோயாளிகளின் உயிர் வாழும் விகிதத்தை கணிசமாக நீட்டிக்க சுமார்16 மணிநேரம் வரை கூட நோயாளிகளை புரோன் நிலையில் வைக்கப்பட்ட நிகழ்வுகளும் உண்டு.

இது இப்போது கோவிட் -19 நோயாளிகளுக்கு ஒரு விதி முறையாகிவிட்டது. இதை பின்பற்றுவதால் இதுவரை எதிர்மறை விளைவுகள் எதுவும் பதிவாகவில்லை. வீட்டிலிருக்கும் கோவிட் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் அளவு குறையும் போது வீட்டிலேயே இந்த முறையை பின்பற்றலாம். ஆம்புலன்ஸ் அல்லது மருத்துவ உதவிக்காக காத்திருக்கும்போது இதை செய்யலாம். கவனிக்க வேண்டிய விஷயம்: இது ஒரு தற்காலிக தீர்வே. ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு மாற்று இல்லை. நோயாளிகளின் ஆக்ஸிஜன் அளவு தொடர்ந்து கணிசமாகக் குறைந்து வருவதை நீங்கள் கண்டால், மருத்துவ அதிகாரியை உடனே தொடர்பு கொள்ளுங்கள்.

First published:

Tags: Corona