கொரோனா தடுப்பூசி பல்வேறு நாடுகளில் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசி எடுத்து கொண்ட பிறகு என்னென்ன செய்யக் கூடாது என்பது பற்றி வாட்ஸ் அப், பேஸ்புக் தளங்களில் பலவிதமான தகவல்கள் உலா வருகின்றன. ஆனால், தடுப்பூசி எடுத்து கொள்வதற்கு முன்பும், பின்பும் அசைவ உணவு சாப்பிடக் கூடாது என்ற எந்த அறிவுறுத்தல்களும் கிடையாது. வழக்கம்போல் எல்லா உணவுகளையும் ருசிக்கலாம்.
அதேநேரம், 28 நாட்கள் மது அருந்தக் கூடாது என்ற செய்தியை முழுவதும் மறுப்பதற்கில்லை. அதாவது கொரோனா தடுப்பூசி போன்ற எந்த தடுப்பூசி எடுத்துக் கொண்டாலும் 72 மணி நேரத்திற்கு மது அருந்தாமல் இருக்க வேண்டும்.
மது தடுப்பூசியின் வீரியத்தை குறைத்துவிடும் என்பதால், தடுப்பூசி எடுத்துக் கொண்ட 72 மணி நேரத்திற்கு மது அருந்தக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடலை வருத்தும் கடுமையான பணிகளை 24 மணி நேரத்திற்கு செய்யக் கூடாது எனவும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறுகிறார்.
சர்க்கரை, ரத்த அழுத்தும் உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்களும் தடுப்பூசி எடுத்துக் கொண்டு வரும் நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் இணைநோய்களுக்கு சாப்பிடும் மருந்துகளை எந்த இடையூறும் இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம். இதய கோளாறுகளுக்கு மருந்து உட்கொள்பவர்கள், ஆஸ்பிரின் மருந்து எடுத்து கொள்பவர்கள் மருத்துவர் ஆலோசனையின் பேரில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் மூன்று நாட்கள் முன் மருந்தை நிறுத்திவிட்டு தடுப்பூசி போட்டு ஒரு நாளுக்கு பின் வழக்கமான மருந்துகளை உட்கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona Vaccine, CoronaVirus