Home » News » Coronavirus-latest-news » WHAT PILLOW CHALLENGE IS THE NEW CHALLENGE VIRAL WITH A PILLOW SKV

இணையத்தில் வைரலாகும் தலையணையை உடலில் துணியாக கட்டிக்கொள்ளும் ’பில்லோ சேலஞ்ச்’..!

இணையத்தில் வைரலாகும் தலையணையை உடலில் துணியாக கட்டிக்கொள்ளும் ’பில்லோ சேலஞ்ச்’..!
பில்லோ சேலஞ்ச்
  • Share this:
ஊரடங்கின் போது வீட்டில் இருப்பவர்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு சேலஞ்ச்களை செய்து வரும் நிலையில், தலையணையை உடலில் துணியாக கட்டிக்கொள்ளும் பில்லோ சேலஞ்ச் வேகமாக பரவி வருகிறது.

ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே தங்களை அடைத்து வைத்துக் கொண்டிருக்கும் பலரும் தங்களது நேரத்தை கழிக்க வித்தியாசமான பல பொழுதுபோக்குகளை உருவாக்கி வருகின்றனர். வீட்டில் உள்ளோர் உடன் நேரம் செலவழிக்கும் பலரும் இணையதளத்திலும் நேரத்தை உற்சாகமாக செயல்பட பல வித்தியாசமான வழிமுறைகளை உருவாக்கி வருகின்றனர்.




ஓவியம் வரைதல், விதவிதமாக சமைத்தல், குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுதல், வீட்டைச் சுத்தம் செய்தல் எனப் பல்வேறு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டாலும், எந்நேரமும் வீட்டிலேயே இருப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனால், ஏதேனும் ஒரு விஷயத்தை, சேலஞ்ச் என்று சொல்லி ட்ரெண்டாக்கி விடுகின்றனர்.

கடந்த வாரம் டி-ஷர்ட் சேலஞ்ச், உலகம் முழுக்கப் பிரபலமானது. தற்போது, உடலில் வெறும் தலையணையை மட்டுமே கட்டிக்கொள்ளும் பில்லோ சேலஞ்ச் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. வீட்டிலேயே இருப்பதால் ஏனோதானோவென்று ஆடை அணிபவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஃபேஷன் சேலஞ்சாக இது வலம் வருகிறது.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் மட்டுமின்றி, உலகெங்கும் உள்ள சாதாரண மனிதர்கள் கூட இந்த சேலஞ்சில் ஈடுபட்டு, தங்களுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். தனியாக, குடும்பமாகத் தலையணையை அணிந்தபடி அவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள், ரசிக்கும்படியாக அமைந்துள்ளன.

வீட்டில் இருப்பவர்கள் மன அழுத்தத்தை போக்கி கொள்ள இந்த வகையிலான வித்தியாசமான செயல்கள் உதவி செய்வதால் பலரும் இந்த வகையிலான சேலஞ்சுகளை வீட்டில் செய்து வருகின்றனர். ஒரு படி மேலே போய் சிலர் தங்கள் வீட்டிலுள்ள செல்லப் பிராணிகளுக்கும் தலையணையை கட்டிவிட்டு புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றி வருகின்றனர்.

 
First published: April 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading