கொரோனாவுக்காக நூறு நாடுகள் பங்கேற்கும் ஒருங்கிணைந்த மருத்துவ சோதனை முயற்சி!

உலக சுகாதார நிறுவனம் நான்கு வகையான மருந்து தொகுப்பை பல்வேறு நாடுகளிலும் நோயாளிகளுக்கு வழங்கி, அதில் எந்த மருந்து தொகுப்பு பலனளிக்கும் எனக் கண்டறிய சோதனை நடத்தவுள்ளது.

கொரோனாவுக்காக நூறு நாடுகள் பங்கேற்கும் ஒருங்கிணைந்த மருத்துவ சோதனை முயற்சி!
உலக சுகாதார நிறுவனம்.
  • Share this:
கொரோனாவுக்கு எந்த மருந்து பலனளிக்கும் என்பதைக் கண்டறிய உலக சுகாதார நிறுவனம் பல நாடுகளில் சோதனை முயற்சியை மேற்கொள்ளவுள்ளது.

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த எந்த மருந்து சிறந்த பலனளிக்கும் என்று கண்டறிய உலகம் முழுவதும் 100 நாடுகளுக்கும் மேல் பங்கேற்கும் 'solidarity trial' எனப்படும் ஒருங்கிணைந்த சோதனையில் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, அப்போலோ மற்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை பங்கேற்கின்றன. இந்த வார இறுதியில் சோதனைகள் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து பலனளிக்கும் என்று கருதி பலர் அதைத் தாங்களாகவே உட்கொண்டு விபரீத விளைவுகளைச் சந்தித்துள்ளனர். உண்மையில் இன்னும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த இந்த மருந்து பயன்படும் என்று ஆதாரப்பூர்வமாக, உறுதியாகக் கூற முடியவில்லை. எனவே உலக சுகாதார நிறுவனம் நான்கு வகையான மருந்து தொகுப்பை பல்வேறு நாடுகளிலும் நோயாளிகளுக்கு வழங்கி, அதில் எந்த மருந்து தொகுப்பு பலனளிக்கும் எனக் கண்டறிய சோதனை நடத்துகிறது.


அதில், ரெம்டிசிவிர்  (Remdesivir), லோபினாவிர் அல்லது ரிடோனாவிர்  (Lopinavir/Ritonavir), லோபினாவிர் அல்லது ரிடோனாவிர் உடன் இண்டர்பிரான் பீடா 1ஏ (Interferon beta-1a),  குளோரோகுயின் அல்லது ஹைட்ராக்சிகுளோரோகுயின் ஆகிய நான்கு வெவ்வேறு மருந்து தொகுப்புகளை வெவ்வேறு நோயாளிகளுக்கு வழங்கி எந்த மருந்து உட்கொண்டவர்களுக்கு அதிக பலனளிக்கிறது எனக் கண்டறிய முடியும்.

1. Remdesivir - இது எபோலாவுக்கு பயன்படுத்தப்பட்ட மருந்து. சில நாடுகளில் மிருகங்கள் மீது நடத்தப்பட்ட சோதனையில் மெர்ஸ் மற்றும் சார்ஸ் நோய்க்கு பலனளித்துள்ளது.

2. Lopinavir/Ritonavir - இது எய்ட்ஸ் நோய்க்கு வழங்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மருந்து.3. Interferon beta-1a - இது தண்டுவட மரபு நோய் சிகிச்சைக்கு வழங்கப்படுவது.

4. Chloroquine அல்லது Hydroxychloroquine- மலேரியாவுக்கான மருந்து.

சென்னை மட்டுமல்லாமல் இந்தியாவில் மற்ற மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வார இறுதியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மூலம் மருந்துகள் கிடைத்த பிறகு சோதனைகள் தொடங்கும்.


Also see:
First published: May 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading