Home /News /coronavirus-latest-news /

Corbevax: இந்தியாவின் மலிவு விலை கொரோனா தடுப்பூசி: பிற தடுப்பூசிகளில் இருந்து எந்த வகையில் மாறுபட்டது?

Corbevax: இந்தியாவின் மலிவு விலை கொரோனா தடுப்பூசி: பிற தடுப்பூசிகளில் இருந்து எந்த வகையில் மாறுபட்டது?

கொரோனா தடுப்பூசி - மாதிரி படம்

கொரோனா தடுப்பூசி - மாதிரி படம்

கொரோனா வைரஸின் ஒரு பகுதியான ஸ்பைக் புரோட்டீனை பயன்படுத்தி இந்த தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
இந்தியாவின் மிகவும் மலிவு விலை கொண்ட கொரோனா தடுப்பூசி என கருதப்படும் Corbevax தடுப்பூசியின் விலை என்ன? யாரால் தயாரிக்கப்படுகிறது? பிற தடுப்பூசிகளில் இருந்து இது எந்த வகையில் மாறுபட்டது? இது எப்போது பயன்பாட்டுக்கு வரும்?,, இது போன்ற தகவல்களை தற்போது தெரிந்து கொள்ளலாம்..

யாரால் தயாரிக்கப்படுகிறது?

ஹைதராபாத்தைச் சேர்ந்த Biological E என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள Corbevax தடுப்பூசியானது, கோவேக்ஸினுக்கு பிறகு உள்நாட்டில் உருவாக்கப்படும் இரண்டாவது தடுப்பூசியாக இருக்கும். ஹூஸ்டனில் உள்ள பேய்லர் காலேஜ் ஆஃப் மெடிசின் உடன் கூட்டாக இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.

முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்திருப்பதால் மத்திய அரசு 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 30 கோடி Corbevax தடுப்பூசியின் டோஸ்களுக்கு முன் கூட்டியே ஆர்டர் கொடுத்திருக்கிறது. தற்போது 3ம் கட்ட பரிசோதனை நடைபெற்றுவருகிறது. இது ஜூலை மாத இறுதிக்குள் நிறைவு பெறும்.

எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு பிறகு முழு வீச்சில் உற்பத்தி தொடங்கி ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையில் மத்திய அரசுக்கு தடுப்பூசி டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Corbevax தடுப்பூசியின் விலை என்ன?

இந்தியாவில் கிடைக்கும் கொரோனா தடுப்பூசிகளிலேயே இது தான் மிகவும் மலிவு விலை கொண்ட தடுப்பூசி என தகவல் வெளியாகி உள்ளது. பிற தடுப்பூசிகள் போலவே இதுவும் இரண்டு டோஸ் தடுப்பூசியாகும். இரண்டு டோஸ்களுக்கும் சேர்த்து 400 ரூபாய்க்கு கீழ் தான் விலை இருக்கும் என கூறப்படுகிறது.

இந்தியாவின் மற்றொரு தடுப்பூசியான கோவிஷீல்டின் ஒரு டோஸ் மட்டுமே 300 முதல் 400 ரூபாய் விலையாகும். இந்தியாவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 3வது தடுப்பூசியான ரஷ்யாவின் ஸ்புட்னிக் - வி தடுப்பூசியின் விலை 1,000 ரூபாயாக உள்ளது.

Also Read:   இந்தியாவில் இன்று முதல் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி சோதனை?

எந்த வகையில் மாறுபட்ட தடுப்பூசி இது?

கொரோனா தடுப்பூசி தயாரிப்பு முறையில் mRNA (Pfizer), inactivated virus (Covaxin), viral vector category (Covishield) என பல்வேறு வகைகள் உள்ளன.

ஆனால் Corbevax தடுப்பூசியானது இவற்றில் இருந்து மாறுபட்டு “recombinant protein sub-unit” என்ற முறையின் மூலம் தயாரிக்கப்படுகிறது. விரிவாக சொல்லுவதென்றால் கொரோனா வைரஸின் ஒரு பகுதியான ஸ்பைக் புரோட்டீனை பயன்படுத்தி இந்த தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.

இந்த ஸ்பைக் புரோட்டீன் தான் கொரோனா வைரஸ் நம் உடலில் உள்ள செல்களில் ஊடுருவ அனுமதிக்கிறது. இவை செல்களில் நுழைந்து பல்வேறு பிரதிகளை உற்பத்தி செய்து நோயை உண்டாக்குகிறது. எனினும் இவை உள்செலுத்தும் போது எந்த வகையிலும் ஆபத்தை ஏற்படுத்தாது.

ஸ்பைக் புரோட்டீனை ஊசி வழியாக செலுத்தும் போது உடலில் உள்ள நோயெதிர்பு செல்களை ஊக்கப்படுத்தி நோயெதிர்பு சக்தியை உருவாக்குகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் உடலை பாதிக்காமல் இது தடுக்கிறது.

முன்னதாக இதே முறையில் மஞ்சள் காமாலை (ஹெபடைடிஸ் பி) நோய்க்கும் தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published:

Tags: Corona Vaccine, Covid-19 vaccine

அடுத்த செய்தி