உலகம் முழுவதும் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளின் நிலை என்ன?

தாங்கள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி 94.5 சதவீதம் பலனளிப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த மாடெர்னா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், உலகம் முழுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல்வேறு கொரோனா தடுப்பூசிகளின் நிலை என்ன?

உலகம் முழுவதும் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளின் நிலை என்ன?
கோப்புப் படம்
  • News18 Tamil
  • Last Updated: November 17, 2020, 10:07 AM IST
  • Share this:
உலகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 44 வகையான தடுப்பூசிகள் , மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு சோதிக்கப்பட்டு வருகிறது. இதில், 11 மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளன.

அமெரிக்காவைச் சேர்ந்த பிஃபிசர் (Pfizer) நிறுவனம் தயாரித்த தடுப்பூசி இறுதிக்கட்ட சோதனையில் உள்ளது. முதல்கட்ட முடிவுகளின்படி, 90 சதவீதம் அளவுக்கு பலனளிப்பதாக பிஃபிசர் நிறுவனம், முதலாவதாக அறிவித்தது. இதன்மூலம், டிசம்பர் மாத இறுதியில் சந்தையில் தடுப்பூசி கிடைக்கும் என்று அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு அமெரிக்க நிறுவனமான மாடெர்னா, தனது தடுப்பூசியின் முதல்கட்ட முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், 94.5 சதவீதம் பலனளிப்பதாக தெரிவித்துள்ளது. ஆண்டு இறுதிக்குள் 2 கோடி மருந்துகளை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இதேபோல, அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி மூன்றாவது கட்ட சோதனையில் உள்ளது. உலகிலேயே முதலாவதாக பதிவு செய்யப்பட்ட ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி , 92 சதவீதம் பலன் அளிப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி சோதனை விரைவில் தொடங்க உள்ளது. இது மார்ச் மாத இறுதியில் முடிவடையும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, அஸ்ட்ராசெனீகா, நோவாவேக்ஸ், பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகள் இறுதிகட்ட சோதனையில் உள்ளன.

பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனீகா இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசியை செரம் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் மூன்றாவது கட்ட சோதனை, டிசம்பர் இறுதியில் முடிவடைய உள்ளது.இதேபோல, அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியையும் செரம் நிறுவனம் பரிசோதித்து வருகிறது. இதன் இரண்டாவது கட்ட சோதனை அடுத்த மாதம் தொடங்குகிறது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் மற்றும் ஐசிஎம்ஆர் இணைந்து தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பூசியும் இறுதிகட்ட சோதனையில் உள்ளது.

ரஷ்யாவின் தடுப்பூசியை விநியோகிக்க ரெட்டிஸ் லேபாரெட்டரீஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஜிடஸ் காடிலா நிறுவனம், மூன்றாவது கட்ட சோதனைக்கான ஒப்புதலைப் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதன்மூலம், டிசம்பர் மாத இறுதிக்குள் தடுப்பூசி இறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

படிக்க...கொரோனா தொற்றுநோய் காலத்தில் தலைகீழாக மாறிய ஆன்லைன் டேட்டிங் உலகம்.. புள்ளிவிவரம் என்ன சொல்கிறது?இது ஒருபுறமிருக்க மிகவும் குளிரூட்டப்பட்ட நிலையில், தடுப்பூசியை கொண்டு செல்வது சவாலானதாக இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, பிஃபிசர் தடுப்பு மருந்தை மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும், மாடெர்னா தடுப்பு மருந்தை மைனஸ் 20 டிகிரி செல்சியஸிலும் கொண்டுசெல்ல வேண்டிய நிலை உள்ளது. இது இந்தியா போன்ற நாடுகளில் சாத்தியமில்லை என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
First published: November 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading