சென்னை மீனம்பாக்கத்திலுள்ள ஜெயின் கல்லூரியில் 50 படுக்கைகளுடன் அண்மையில் தமிழக அரசு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைத்தது. இங்கு வகுப்பறைகள் அனைத்தும் தூய்மையாக பராமரிக்கப்படுகின்றன. லேசானது முதல் 50 விழுக்காடு வரை நுரையீரல் பாதிக்கப்பட்டோர் இங்கு அனுமதிக்கப்படுவதாக கூறுகிறார் மருத்துவர் சதீஷ்குமார்.
இங்குள்ள பூங்காவில் நோயாளிகள் தங்கள் பொழுதை கழித்து வருகின்றனர். மன இறுக்கத்தை போக்கி மகிழ்வளிக்கும் வகையில், பாடல்களும் ஒலிபரப்பப்படுகின்றன. மனம் மயக்கும் இசையுடன் வயது பேதமின்றி அனைவருக்கும் தரமான மூலிகை உணவுகளும், மருந்துகளும் அளிக்கப்படுவதால் ஒரு வாரத்திற்குள்ளாகவே பலரும் குணமாகி வீடு திரும்புகின்றனர்.
பூங்காக்களில் இருப்பதைப் போல விருப்பப்பட்ட இடங்களில் அமர்ந்துள்ள நோயாளிகளை தேடித் தேடிச்சென்று அவர்களின் உடல் வெப்பநிலையையும், நாடித்துடிப்பையும் மருத்துவர்கள் பரிசோதிக்கின்றனர். நுரையீரல் பாதிப்பு அதிகமுள்ளோருக்கு தனி கவனம் செலுத்தப்பட்டு ஆக்சிஜன் சிலிண்டர்களின் உதவியுடன் சிகிச்சை நடக்கிறது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்கு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கு இயற்கை சூழலும் உதவுகிறது.
மேலும் படிக்க... சேலம் கொரோனா சிகிச்சை பிரிவில் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு
நல்ல காற்றோட்டம், சுத்தமான அறைகள், தரமான உணவு, பொழுதுபோக்கு பூங்கா, இசை, யோகா, மூச்சுப்பயிற்சி மருத்துவர்களின் கனிவான உபசரிப்பு ஆகியவற்றால் தொற்றாளர்கள் அச்சத்தில் இருந்து விரைவில் விடுபடுகின்றனர். ஆம்புலன்ஸ் அலறலோ, உறவினர்கள் மற்றும் நோயாளிகளின் அழுகுரல்களோ இல்லாமல் அமைதியான சூழலில் செயல்படுகிறது இந்த சித்த மருத்துவ மையம்.
நோயாளிகளுக்கு சத்தான மூலிகை உணவும் அளிக்கப்படுவதாக தெரிவிக்கிறார் மருத்துவர் சதீஷ்குமார். இதேபோன்று, பல்வேறு இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சையை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus