• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தமிழ்நாட்டில் அதிர்ச்சியூட்டும் வகையில் மின் கட்டணம் உயர்வதற்கு என்ன காரணம்?

தமிழ்நாட்டில் அதிர்ச்சியூட்டும் வகையில் மின் கட்டணம் உயர்வதற்கு என்ன காரணம்?

கோப்புப்படம்

கோப்புப்படம்

தமிழகத்தில் மின்பயன்பாடு அதிகமாக காரணங்கள் என்னென்ன என்பதை குறித்த விளக்கத்தை பார்க்கலாம்.

  • Share this:
தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய ஒவ்வொரு வீடுகளுக்கும் தற்போது அதிர்ச்சி ஊட்டும் வகையில் மின் பயன்பாடு உயர்ந்துள்ளது. ஏன் மின் கட்டணம் அதிகமாக தெரிகிறது? என்பதை தெரிந்துகொள்ள மின்வாரிய ஊழியர்களிடம் சென்ற கேட்டறிந்தோம். அதற்கு அவர்கள் மூன்று காரணங்களை தெரிவித்தனர்.

1.முதல் காரணம்

வெயில் காலம் என்பதால் அதிக மின்சார பயன்பாடு வீடுகளில் சராசரியாக உயர்ந்துள்ளது.

2. இரண்டாவது காரணம்

கொரோனோ காலத்தில் வீடுகளிலேயே மக்கள் இருந்ததால் வழக்கத்தைவிட அதிகமாக பயன்படுத்தினர்.

3. மூன்றாவது காரணம்

முக்கியமான காரணம் வழக்கமாக மின் கட்டணம் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கணக்கு எடுக்கப்படும்.

இதன்படி எடுக்கும் பொழுது சிறிய வீடுகள் 500 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்துவர். இதன் மூலம் மின் கட்டணம் குறைவாக கணக்கிடப்படும். ஆனால் 510 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால்  மின்கட்டணம் 5.75 ரூபாய் என்ற அளவுக்கு உயரும். இருந்தாலும் அது பெரும் தொகையாக இருக்காது ஏனென்றால் மாதம்  மாதம் அவர்கள் அப்படித்தான் கட்டணம் செலுத்துவர்.

ஆனால் தற்போது மின்சார ஊழியர்கள் நேரில் சென்று கடந்த இரண்டு மாதங்களாக எடுக்க முடியாத நிலை இருந்தது. இதனால் ஜனவரி மாதம் 25ஆம் தேதி கடைசியாக கணக்கெடுத்து இருந்தால் மார்ச் மாதம் 25ஆம் தேதி கணக்கெடுக்க வேண்டும் ஆனால் அப்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் மின் ஊழியர்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தற்போதுதான் அவர்கள் கணக்கெடுக்க சென்று வருகின்றனர்.

அதன் அடிப்படையில் ஜனவரி 25 தொடங்கி மே மாதம் 25ஆம் தேதி வரை ஒட்டுமொத்தமாக நான்கு மாதத்திற்கு மின் பயனீட்டு அளவு மின் ஊழியர்கள் எடுக்கின்றனர். அப்படி கணக்கு எடுக்கும் போது வழக்கமாக இரண்டு மாதத்திற்கு 500 யூனிட் பயன்படுத்தி இருந்தாலும் தற்போது 1010 யூனிட் என்பது பயன்படுத்தியது போல காண்பிக்கும் ஆயிரம் யூனிட் பயன்படுத்தினால் அதற்கான தொகை என்பது அதிகம்.  5486 இதில் இலவச மின்சாரம் 100 யூனிட் தொகை 120 மட்டுமே கழித்துக் கொள்ளப்படும். கடந்தமாதம் கட்டிய தொகையை கட்டினாலும் எந்த பயனும் இல்லை.

இதனால் அதிக மின் கட்டணத்தை செலுத்தும் நிலை மின் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் ஆனால் ஒருவேளை அரசு முன்வந்து இந்த மின் பயன்பாட்டை இரண்டாக பிரித்து கணக்கிட்டால் அவர்கள் வழக்கமாக கட்டும் மின் கட்டணத்தை செலுத்தலாம்.

ஆனால் இதில் எந்த வழிமுறைகளும் மின் ஊழியர்களுக்கு கொடுக்கப்படாமல் இருக்கின்ற காரணத்தினால் இதுபோன்ற இக்கட்டான சூழல் ஒவ்வொரு வீடுகளிலும் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் இரண்டு மாதம் அளவில்தான் கணக்கெடுப்பு செய்கிறோம் என அரசு கூறினாலும் நடைமுறையில் நிறையவே குழப்பம் உள்ளது. இதனை சரி செய்ய அரசு முன் வருமா அல்லது முழு கட்டணத்தையும் கட்ட வேண்டும் என்று அரசு தொடர்ந்து கட்டணத்தை வசூல் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கதான் வேண்டும்.

மேலும் படிக்க...

நாகையில் கந்துவட்டி கொடுமை ; பெட்ரோல் பங்க் ஊழியர்கள் 2 பேர் தற்கொலை

 






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: