நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஏன்? அதன் அவசியம் என்ன? முழு விவரம்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஏன்? அதன் அவசியம் என்ன? முழு விவரம்
மாதிரி படம்
  • Share this:
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது ஏன்? அதன் அவசியம் என்ன? என்பது பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

ஊரடங்கு உத்தரவு எதற்கு? நாடு முழுவதும் பெரும்பாலானோர் எழுப்பும் கேள்வி இவை. மத்திய, மாநில அரசுகள் போதிய விளக்கம் அளித்தபோதும் இந்த கேள்வி எழுந்தவண்ணம் உள்ளது. இதற்கான காரணத்தை கூற, நாம் கொரோனாவின் 4 நிலைகளை அறிந்துக் கொள்வது அவசியம்.

வெளிநாடுகளில் இருந்து கொரோனா நோய் தொற்றோடு வருவதுதான் முதல் நிலை. அடுத்ததாக, வெளிநாட்டில் இருந்து நோய் தொற்றுடன் வந்தவர்கள் மூலம் உளேளூர்வாசிகளுக்கு பரவுவதே இரண்டாம் நிலை. அதாவது, வெளிநாட்டில் இருந்து வந்தவர்களோடு தொடர்பில் இருப்போருக்கு தொற்று பரவும். இந்த நிலையில்தான் இந்தியா தற்போது இருப்பதாக கூறப்படுகிறது.


இதற்கு அடுத்ததாக சமூகப் பரவல் நிலைக்குச் செல்வதுதான் மூன்றாம் நிலை. இந்த அபாயகரமான நிலை ஏற்பட்டால், தொற்று யார் மூலம் பரவியது என கண்டறிவதில் சிரமம் ஏற்படும். வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை சந்திக்காதவர்களுக்கும் பரவும். கடைசியாக, உச்சபட்ச நிலையான நான்காம் நிலையில் கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிவதே கடினமாகி விடும்,

இந்தியாவில் 3ம் மற்றும் நான்காம் நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் 130 கோடி மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடான இந்தியாவில், சமூக பரவல் என்ற நிலை வந்துவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். இந்த நடவடிக்கை தாமதமானது என சில விமர்சனங்களும் எழுந்துள்ளன.

ஆனால் விமர்சனங்களை தாண்டி அதன் தீவிரத்தை உணர்ந்தால் மட்டும் இதனை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.







சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading