பிளாஸ்மா தெரபி என்றால் என்ன..? அது கொரோனாவை குணப்படுத்துமா..?

சமீபத்தில் 49 வயதான கொரோனா தொற்று நோயாளிக்கு பிளாஸ்மா தெரபி மேற்கொள்ளப்பட்டு அவர் தற்போது குணமாகியுள்ளார்.

பிளாஸ்மா தெரபி என்றால் என்ன..? அது கொரோனாவை குணப்படுத்துமா..?
பிளாஸ்மா தெரபி
  • Share this:
கொரோனாவால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு உரிய மருந்து கண்டுபிடிக்க மருத்துவர்களும் ஆய்வாளர்களும் தீவிரப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அதுவரை சில சிகிச்சை முறைகளைக் கையாண்டு நோயாளிகளை குணமாக்கி வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் 49 வயதான கொரோனா தொற்று நோயாளிக்கு பிளாஸ்மா தெரபி மேற்கொள்ளப்பட்டு அவர் தற்போது குணமாகியுள்ளார். அதுகுறித்த செய்திகளும் வெளியானதை பார்த்திருக்கக் கூடும். பிளாஸ்மா தெரபி என்பது சிலருக்கு முதல் முறையாகக் கேட்கும் சிகிச்சை முறையாக இருக்கலாம். அவர்களுக்கு அதுகுறித்த புரிதலைத் தரவே இந்தக் கட்டுரை.

பிளாஸ்மா தெரபி என்றால் என்ன ?


முதலில் பிளாஸ்மா என்பது குருதி அணுக்களை ஏந்திச் செல்லும் நிறம் அற்ற திரவமாகும். இந்த சிகிச்சை முறையில், முழுமையாக குணமடைந்த ஒரு COVID நோயாளியிடமிருந்து ஒரு கொரோனா வைரஸ் நோயாளிக்கு பிளாஸ்மா மாற்றப்படுகிறது.

பிளாஸ்மா தெரபியில் கொரோனா வைரஸிலிருந்து  மீட்கப்பட்ட  நோயாளியின் இரத்தத்திலிருந்து ஆன்டிபாடிகளைப் பயன்படுத்தி கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, இரத்த அணுக்களும் அதிகரிக்கிறது. இதனால் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உடல் தயாராகிறது.

இது எவ்வாறு நிகழ்கிறது..?

இதுவும் இரத்த தானம் செய்வது போன்றுதான் செய்யப்படுகிறது. இரத்த தானத்திற்கு ஆகும் நேரமே இதற்கும் ஆகும். இதற்கும் ஒரு டியூப் போல் இருவரின் நரம்புகளிலும் செலுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர் உடலில் பிளாஸ்மா நீக்கப்பட்டு பின் இரத்த அணுக்கள் செலுத்தப்படுகிறது. இது இரத்த தானம் போல் ஒரு முறை அல்லாமல் வாரத்தில் 2 - 3 முறை இந்த பிளாஸ்மா தெரப்பி செய்யப்படுகிறது. இதற்கு கொரோனாவில் இருந்து மீண்ட இரண்டு பேர் பாதிக்கப்பட்டவருக்கு உதவ வேண்டியிருக்கும்.

இந்த பிளாஸ்மா தெரபியானது இந்தியாவிலும் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது.இதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையமும் அனுமதித்துள்ளது. கேரளா , குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பார்க்க :
First published: April 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading