கொரோனா சிகிச்சையில் புது நம்பிக்கையான டெக்ஸாமெதசோன் - விலை எவ்வளவு? யார் யாருக்கு பலனளிக்கும்? விரிவான தகவல்கள்...

கொரோனா நோய்தொற்று பாதித்தவர்களின் சிகிச்சையில் முக்கிய நம்பிக்கையாக இந்த மருந்து உருவெடுத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா சிகிச்சையில் புது நம்பிக்கையான டெக்ஸாமெதசோன் - விலை எவ்வளவு? யார் யாருக்கு பலனளிக்கும்? விரிவான தகவல்கள்...
dexamethasone
  • Share this:
விலை மலிவாகவும், மிக அதிகமாகவும் பயன்படுத்தப்படும் ஸ்டீராய்டு டெக்ஸாமெதசோன், கொரோனா நோய்தொற்று பாதித்தவர்களின் சிகிச்சையில் முக்கிய நம்பிக்கையாக இந்த மருந்து உருவெடுத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆர்த்ரிட்டிஸ் போன்ற நோய்களில் வீக்கத்தைக் குறைக்கவும், கொரோனா நோய்த்தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் காத்து மரண விகிதத்தைக் குறைக்கவும் உதவுவதாக சோதனை முடிவுகள் தெரிவித்துள்ளன. தீவிரமான பாதிப்புடைய நோயாளிகளுக்கு இவை உடனடியாக அளிக்கப்படவேண்டும் எனவும் இதுவரையிலான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

டெக்ஸமெதசோன்வெண்ட்டிலேட்டர்களில், ஆக்சிஜன் சப்போர்ட் கிடைக்க வேண்டிய சுவாச பாதிப்பின்போது அளிக்கப்படும் இம்மருந்து உயிர் காக்கும் மருந்தாக செயல்படுவதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 4,31,000 பேரைவிட அதிகமானவர்களைக் கொன்றிருக்கும் இந்த வைரஸ் பாதிப்பின் தீவிரத்தை உடனடியாக குறைக்க இம்மருந்து பயன்படுவதாக இங்கிலாந்து முதன்மை மருத்துவ அலுவலர் க்றிஸ் விட்டி தெரிவித்துள்ளார்.

டெக்ஸமெதசோன்


தீவிர நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வெண்ட்டிலேட்டர் உதவியுடன் இருக்கும் 8-இல் ஒரு கோவிட் நோயாளியில் ஒருவர் இம்மருந்தால் உயிர் பிழைப்பதாகவும், ஆக்சிஜன் சப்போர்ட்டில் மட்டுமே இருக்கும் 25 கோவிட் நோயாளிகளில் ஒருவர் உயிர் பிழைப்பதாகவும் ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய காலத்தில் இருந்தே இந்த மருந்தைப் பயன்படுத்தியிருந்தால் 5 ஆயிரம் உயிர்களைப் பாதுகாத்திருக்க முடியும். கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு இந்த மருந்து மிகவும் உதவும் என்று வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.
டெக்ஸமெதசோன்


கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள ஏழை நாடுகளுக்கு இந்த மருந்து மிகவும் உதவிகரமாக இருக்கும். மனித உடலின் நோய் எதிர்ப்பு கொரோனா நோயை எதிர்த்து போரிடும் போது உடல் உறுப்புகளுக்கு ஏற்படும் சேதத்தை குணப்படுத்த இந்த டெக்ஸமெத்தசோன் பயன்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானிகளில் ஒருவரான செளமியா சுவாமிநாதன், உயிர் காக்கும் மருந்தாக ஆய்வுகளில் கண்டறியப்பட்ட டெக்ஸமெதசோன் மிகவும் நம்பிக்கையூட்டுவதாகத் தெரிவித்திருக்கிறார்.

பத்து நாட்கள் வரை டெக்ஸ்மெத்தசோன் சிகிச்சைக்கு 5 பவுண்டுகள், அதாவது இந்திய விலைப்படி 500 ரூபாய் மட்டுமே செலவாகிறது என்பதும் பொருத்தமான நேரத்தில் இம்மருந்து அளிக்கப்படுதல் வேண்டும் என்பதையும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

லேசான தொற்று ஏற்பட்டு பெரிதாக பாதிப்பு இல்லாதவர்களுக்கு இதனால் எந்த பயனும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வைரஸ் லிங்க்குகள், மெத்தனால் கலந்த சானிட்டைசர்கள்... கவனமாக இருக்குமாறு எச்சரிக்கிறது சிபிஐ

ஆண்டி இன்ஃப்லாமேட்ரி மருந்தான டெக்ஸமெதசோன், 1960களில் இருந்து ஆர்த்ரிட்டிஸ் மற்றும் ஆஸ்துமாவுக்கு பயன்படுத்தப்பட்டுவந்த மருந்தாகும். மொத்தமாக பத்து நாட்களுக்கு 6 மிகி டெக்ஸமெதசோன் மருந்தை எடுத்த 2104 நோயாளிகள்,  4321 சாதாரண சிகிச்சை எடுத்துக்கொண்ட நோயாளிகளுடன் ஒப்பிடப்பட்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், இதன் முக்கிய பண்புகள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

 
First published: June 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading