கொரோனா நோயாளிகளின் உடலில் உருவாகும் ‘சைட்டோகைன் புயல்’ என்பது என்ன?

கொரோனா நோயாளிகள் உடலில் சைட்டோகைன் புயல் என்ற நிலை உருவாகி அவர்களை ஆபத்தில் தள்ளி விடுகிறது.

கொரோனா நோயாளிகளின் உடலில் உருவாகும் ‘சைட்டோகைன் புயல்’ என்பது என்ன?
‘சைட்டோகைன் புயல்’ என்பது என்ன?
  • Share this:
கொரோனா நோயாளிகள் உடலில் சைட்டோகைன் புயல் என்ற நிலை உருவாகி அவர்களை ஆபத்தில் தள்ளி விடுகிறது.
சைட்டோகைன் புயல் என்பது வைரஸுக்கு எதிராக உடலில் எதிர்ப்பு சக்திகளின் அதீத எதிர்வினையாகும். இந்த எதிர்வினை வைரஸைத் தடுக்காமல் நோயாளியின் உயிருக்கு சில நேரங்களில் ஆபத்தாகிவிடுகிறது.

வைரஸ் உடலில் நுழையும்போது அதை கண்டறிந்து, உடலில் உள்ள  மேக்ரோபேஜ் எனும் வெள்ளை அணுக்கள் வைரஸுக்கு எதிராக சில ப்ரோடீன்களை வெளியிடும். அதுவே சைட்டோகைன் எனப்படும். சைட்டோகைன்களில் பலவகை உள்ளன.


உடம்பில் ஒரு இடத்தில் வைரஸ் தாக்கும் போது இந்த சைட்டோகைன்கள் எதிர்வினையாற்றும். அப்போது அவை உடம்பின் மற்ற பகுதிகளிலிருந்தும் சைட்டோகைன்களை வைரஸ் தாக்குதல் நடக்கும் இடத்துக்கு வரவழைக்கும் தன்மை கொண்டவை. இவை இதய துடிப்பை அதிகரித்து, உடல் வெப்பத்தை அதிகரித்து, ரத்த கட்டுகள் ஏற்படுத்தி வைரஸ் தாக்குதலைப் பரவாமல் தடுக்கும்.

Also see:
வைரஸ் தாக்குதலை வெற்றிகரமாக நிறுத்தி விட்டால் இந்த எதிர்வினைகள் நின்று விடும். ஆனால் சில நேரங்களில் இது போன்ற எதிர்வினை கட்டுப்பாடில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும். அந்த நிகழ்வுதான் சைட்டோகைன் புயல் எனப்படுகிறது. அந்த புயலில் தாக்கப்படுவது வைரஸ் அல்ல, உடலின் உறுப்புகளே. நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் ஆகிய உறுப்புகள் பாதித்து உயிருக்கு ஆபத்தாகக் கூடும். இணை நோய்கள் இல்லாதவர்களுக்கும் இது ஏற்படக் கூடும். ஸ்டீராய்டுகள் கொண்டு ஒரு சில சைட்டோகைன்களின் செயல்பாட்டைத் தடுக்க முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்கான ஆய்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
First published: July 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading