ஆக்சிமீட்டர் என்றால் என்ன? எவ்வாறு வேலை செய்கிறது?

ஆக்சிமீட்டர்

ஒருவரின் உடலில் இருக்கும் ஆக்சிஜன் லெவல் குறையும்போது பல்வேறு உடல் உபாதைகளுக்கும், உயிரிழக்கும் நிலைக்குக் கூட செல்ல நேரிடும்.

  • Share this:
நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை மிகப்பெரிய பூதாகரமாக உருவெடுத்துள்ளது. சாதாரண காய்ச்சலாக நினைத்திருந்த பலரும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மருத்துவ மனைகளை நோக்கி ஓடி வருகின்றனர். பல மாநிலங்களில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக, ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழக்கும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஒருவரின் உடலில் இருக்கும் ஆக்சிஜன் லெவல் குறையும்போது பல்வேறு உடல் உபாதைகளுக்கும், உயிரிழக்கும் நிலைக்குக் கூட செல்ல நேரிடும். தற்போது இருக்கும் தொழில்நுட்ப  உலகில் ஆக்சிமீட்டர் போன்ற கெஜெட்டுகளை வைத்து உடலில் இருக்கும் ஆக்சிஜன் அளவை அறிந்து கொண்டு அதற்கேற்ப மருத்துவமனையை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். கொரோனா பரவி வரும் இந்த சூழலில் பலருக்கும் உடலில் இருக்கும் ஆக்சிஜன் அளவை அறிந்து கொள்ள அந்த ஆக்சிமீட்டர்கள் பயன்படுகின்றன. இது எவ்வாறு வேலை செய்கிறது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ஆக்சிமீட்டர் என்றால் என்ன?

ஆக்சிமீட்டர் என்பது துணி கிளிப் போன்ற மிகச்சிறிய தொழில்நுட்ப கருவியாகும். இந்த கருவியை ஒருவரின் விரலில் வைக்கும்போது, ஒரு சில நொடிகளில் அவரின் உடலில் இருக்கும் ஆக்சிஜன் அளவை காண்பிடித்துவிடும். பெரும்பாலனவர்கள் 95 மற்றும் அதற்கு மேல் ஆக்சிஜன் அளவு இருக்கும். காய்ச்சல் போன்ற உடல் நலப் பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு 95 விழுக்காட்டு கீழாக ஆக்சிஜன் அளவு இருக்கும். 93 அல்லது 92 விழுக்காடு கீழாக ஆக்சிஜன் அளவு குறையும்போது, ஒருவர் மருத்துவரை சென்று ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது. ஆக்சிமீட்டர் வழியே இதயத்துடிப்பை தெரிந்து கொள்ளலாம். ஆரோக்கியமான நபர்களுக்கு நிமிடத்துக்கு 60 முதல் 100 வரை இதயத்துடிப்பு இருக்கும்.

ஆக்சிமீட்டர் எப்படி வேலை செய்கிறது?

இதயத்தில் இருந்து உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்சிஜன் அனுப்பப்படும் அளவை ஆக்சிமீட்டர் மூலம் அறிந்து கொள்ளலாம். விரலில் ஆக்சிமீட்டர் பொருத்தியவுடன், அது விரல்களில் பாயும் ரத்தத்தின் அளவு மற்றும் பல்வேறு அலைநீளங்களை நொடிப்பொழுதில் தொகுக்கிறது. ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் துடிப்பை ஆராய்ந்து அதன்வழியே ஆக்சிஜன் அளவையும் கணக்கிட்டு காண்பிக்கிறது.

ஆக்சிமீட்டர் ஏன் தேவை?

கொரோனா நோய் போன்ற பெருந்தொற்று பரவும் இந்த நேரத்தில் ஆக்சிமீட்டர் போன்ற தொழில்நுட்ப கருவிகள் ஒவ்வொருவருக்கும் தேவை என்ற நிலை உருவாகியுள்ளது. பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளுடன் வீட்டில் ஒருவர் இருந்தால், அவரின் ஆக்சிஜன் அளவை உடனடியாக பரிசோதிக்கவும், காய்சலால் பாதிக்கப்பட்டவரின் ஆக்சிஜன் அளவை பரிசோதித்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் ஆக்சிமீட்டர்கள் உதவியாக இருக்கின்றன. கடந்த ஆண்டு கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் ஆக்சிமீட்டர்களை வழங்க முடிவு செய்தது

அனைவரும் ஆக்சிமீட்டர் வைத்து பயன்படுத்துவது குறித்து மருத்துவ உலகில் இருவேறு கருத்துகளும் நிலவி வருகின்றனர். ஒரு பிரிவினர் அனைவரும் ஆக்சிமீட்டர் வைத்து ஆக்சிஜன் அளவை பரிசோதனை செய்து கொள்வதில் தவறில்லை என்றும், ஒரு சிலர் தேவையற்ற மனக்குழப்பங்களுக்கு மக்களை இட்டுச்செல்லும் என்றும் கூறி வருகின்றனர். தவறாக ஆக்சிஜன் அளவை புரிந்து கொண்டு உடனடியாக சிலர் மருத்துவமனையை அணுகவும் வாய்ப்புள்ளதாகவும் ஒரு சில மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

 
Published by:Tamilmalar Natarajan
First published: