தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு, சிகிச்சை பலனின்றி ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இருப்பினும் பெரும்பாலானோர் கொரோனாவில் இருந்து மீண்டு வருகின்றனர். அவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டியதுடன், மற்றவர்கள் தொற்று ஏற்படாமல் தவிர்க்கவும் சில வழிமுறைகளை பின்பற்றினால் போதும் என்கின்றனர் மருத்துவர்கள்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முக்கியமானது நோய் எதிர்ப்பு சக்திதான். மருந்து, மாத்திரைகள் இல்லாத இந்த தொற்றுக்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்திதான் பக்கபலம். இதை உறுதி செய்ய மக்கள் எதையெல்லாம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பட்டியலிடுகின்றனர். இதனால், தொற்றை எதிர்த்து போராடலாம் என்கின்றனர். குறிப்பாக, கொரோனாவிலிருந்து குணமடைந்த மற்றும் தொற்றை எதிர்த்துப் போராட முழு தானியங்களான கோதுமை, கேழ்வரகு, கொண்டைக்கடலை போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம்.
உடலில் புரதச்சத்தை அதிகரிக்க கோழிக்கறி, மீன் மற்றும் முட்டை போன்ற அசைவ உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், சோயா, பாதாம், பிஸ்தா, நிலக்கடலை, முந்திரி போன்றவற்றை சாப்பிடலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆரோக்கியமான கொழுப்பு உணவுக்கு தேங்காய் எண்ணெய், சோயா எண்ணெய், மீன் ஆகியவற்றை பயன்படுத்தலாம் என்றும், நாள்தோறும் உணவில் காய்கறிகளை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.
அதேபோல், மஞ்சள் கலந்த பாலை குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றும், காலை எழுந்தவுடன் இரவு ஊற வைத்த பாதாம் மற்றும் உலர்ந்த திராட்சியை சாப்பிட வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். காலையில் கேழ்வரகு தோசை, வேகவைத்த கொண்டைக்கடலை, பச்சை பட்டாணி, பச்சை பயறு ஆகியவற்றை சாப்பிடலாம் என்றும், மதிய உணவில் காய்கறிகளையும், வெல்லம் மற்றும் நெய்யை சேர்த்துக் கொள்ளலாம் என பரிந்துரைக்கின்றனர்.
வெளியில் இருந்து மூக்கு அல்லது வாய் வழியாக நுழையும் கொரோனா வைரஸ், முதலில் நமது மூக்கு பகுதியில் மறைந்திருந்து, அதன்பிறகு நுரையீரலுக்கு சென்று பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், நன்றாக கொதிக்கவைத்த நீரை கொண்டு ஆவிபிடிப்பது நல்ல பலனைத் தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க.."கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும்" நீண்ட காலத்திற்கு பிறகு ஒப்புக்கொண்ட உலக சுகாதார மையம்!
அத்துடன் நாள்தோறும் குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருப்பதோடு, 8 மணி நேரம் வரை உறங்க வேண்டும் என்கின்றனர். குறைந்தபட்சம் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிப்பதோடு, வாழை, எலுமிச்சை, அவகேடோ, பூண்டு, ஆரஞ்சு, அன்னாசி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus