முகக்கவசம் அணிவதால் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன? அதற்கு மருத்துவர்கள் தரும் ஆலோசனைகள் என்ன?

கோப்புப் படம்

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், முகக்கவசம் அணிவதால் ஏற்படும் பிரச்னைகளை முன்வைக்கின்றனர் பொதுமக்கள். அதற்கு மருத்துவர்கள் தரும் ஆலோசனைகள் என்ன? 

 • Share this:
  வீட்டில் இருந்து வெளியிடங்களுக்கு செல்லும் போது மறந்துவிடக் கூடாத பொருளாக மாறியிருக்கிறது முகக்கவசம். பொது இடங்களுக்கு செல்லும் போது 3 அடுக்கு கொண்ட துணியால் ஆன முகக்கவசத்தை மக்கள் அணிய அறிவுறுத்தப்படுகின்றனர். மருத்துவர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் என் 95 ரக முகக்கவசத்தையும், மருத்துவமனைகளின் பிற பணியாளர்கள் சர்ஜிக்கல் முகக்கவசத்தையும் பயன்படுத்தி வருகின்றனர்.

  கொரோனாவை தடுக்கும் முக்கிய அம்சமாக முகக்கவசம் கருதப்பட்டாலும், அதை அணிவதில் பலருக்கு சிரமம் ஏற்படுகிறது. முகக்கவசங்களை அணிவதால் மூச்சு விடுவதில் பெரும் சிரமம் ஏற்படுவதாகவும், காதுகள் அருகே சிராய்ப்புகள் உருவாகிறது என்றும் சிலர் கூறுகின்றனர்.

  மேலும் படிக்க... தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?

  வெயில் காலங்களில் முகக்கவசங்கள் போடுவதால் அதிகளவில் வியர்வை வெளியேறுவதாகவும், தூய காற்றை சுவாசிக்க முடியவில்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். முகக்கவசம் அணிவதை தவிர, வேறெந்த தடுப்பு நடவடிக்கைகள் இருந்தாலும் அதை கடைபிடிப்பதில் தங்களுக்கு சிரமம் இல்லை எனவும் கூறுகின்றனர்.

  ரமலான் நோன்பு-இன்று முதல் கடைப்பிடிப்பு

  முகக்கவசங்களை அணிவதில் சில சிரமங்கள் இருந்தாலும், அதை அணியாமல் இருந்தால் ஆபத்து அதிகம் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். துணிகளால் செய்யப்பட்ட முகக்கவசம் அணிவதில் சிரமம் இருந்தால், வேறு முகக்கவசங்களை பயன்படுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா மட்டுமின்றி, பிற நோய் தொற்றுகளில் இருந்தும் முகக்கவசம் நம்மை பாதுகாப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: