ஹோம் /நியூஸ் /கொரோனா /

கொரோனா தொற்றுப் பரவலுக்குப் பின்பு பிறகு குழந்தைகளுக்கு ஏற்படும் புதிய பாதிப்புகள் என்னென்ன?

கொரோனா தொற்றுப் பரவலுக்குப் பின்பு பிறகு குழந்தைகளுக்கு ஏற்படும் புதிய பாதிப்புகள் என்னென்ன?

கொரோனா தாக்கிய பிறகு குழந்தைகளுக்கு புதிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. இருதயம் உட்பட பல உறுப்புகளை சேதப்படுத்த வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கொரோனா தாக்கிய பிறகு அதற்கு எதிராக உருவான எதிர்ப்பு சக்தி உடம்பை பாதுகாப்பதற்கு பதிலாக ரத்த நாளங்களை தாக்கி அதனால் உறுப்புகளையும் சேதப்படுத்தக் கூடும். எந்தவொரு வைரஸ் தாக்கினாலும் multi system inflammatory syndrome என்ற பாதிப்பு சிலருக்கு ஏற்படுவது வழக்கம். தற்போது கொரோனாவால் தாக்கப்பட்ட ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் வெகு சிலரில் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் ,  கண் எரிச்சல்,  உடம்பில் சிவப்பு திட்டுகள் ஆகியவை இந்த பாதிப்புக்கான முதல் கட்ட அறிகுறிகள் ஆகும். ரத்தத்திலும் சில மாற்றங்கள் ஏற்படுவது பரிசோதனையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இந்த பாதிப்பு காரணமாக காய்ச்சல் வரும் போது தான் அறிகுறிகள் இல்லாமல் கொரோனா வந்து போயுள்ளது  தெரியவருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த பாதிப்புக்கான சிகிச்சை வழங்கப்பட்டது. பெரும்பாலானவர்களுக்கு கொரோனா தாக்கியதே தெரியவில்லை. ஆண்டிபாடி பரிசோதனை மூலமே கொரோனா தொற்றுக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது போன்ற பாதிப்பு டெங்கு நோயாளிகளிலும் காணப்பட்டது. ஆனால் கொரோனாவில் தீவிரமாக இருப்பதாக அரசு ஸ்டான்லி மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் அரவிந்த் தெரிவிக்கிறார்.

இந்த பாதிப்பை முதலிலேயே கண்டறிந்துவிட்டால் எளிதில் குணப்படுத்தலாம் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். கொரோனா எதிர்ப்பு சக்தியை கட்டுப்படுத்த இம்முனோகுளோபுளின் ஊசி கொடுத்தால் ஐந்து நாட்களில் குழந்தைகளிடம் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க.. டிக்டாக் பிரபலம் ஜிபி.முத்து தற்கொலை முயற்சிக்கு காரணம் என்ன? - ’விபரீத முடிவு வேண்டாம் அண்ணா..’ என அன்பு கட்டளையிடும் ரசிகர்கள்..

அதன் பிறகு இருதய செயல்பாடு குறித்த பரிசோதனைகளை அவ்வப்போது செய்து, தொடர் கண்காணிப்பில் இருப்பது மிக அவசியம் என்றும் வலியுறுத்துகின்றனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Child Care, CoronaVirus