கொரோனாவால் 65 வயதைக் கடந்தவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன?

மாதிரி படம்

வயதானவர்கள் லேசான அறிகுறி தென்பட்டவுடன், கொரோனா சிகிச்சை மையத்திற்கு வந்தால் உயிரிழப்புகளை தவிர்க்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். 

 • Share this:
  கொரோனா தொற்றின் 2வது அலை தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. தொற்று பாதிப்பு குறைவாக பதிவானாலும், பலி எண்ணிக்கை அச்சமூட்டும் வகையில் அதிகரித்து. இந்தநிலையில் மதுரையைச் சேர்ந்த "விமோசன" என்ற அமைப்பு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைத்தும், அவர்களுக்கு தன்னம்பிக்கையும் அளித்து வருகின்றனர்.

  அந்தவகையில் கடந்த சில தினங்களாக கொரோனா நோயாளிகளிடம் இருந்துவந்த அழைப்புகளை ஆய்வு செய்த அவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தாமதமாகவே மருத்துவமனைக்கு செல்வதை கண்டறிந்துள்ளனர். மேலும் லேசான அறிகுறிகள்x தெரிந்தால், 65 வயதை கடந்த முதியவர்கள், வழக்கமான உடல் உபாதை தான் என்று நினைத்து, சாதாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்வதாக கூறுகின்றனர்.

  கொரொனா தொற்று உறுதியானால், மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிடுவார்களோ என்ற அச்சத்தில் முதியவர்கள் பலர் வீட்டிலேயே தங்கிவிடுவதாகவும், ஒரு வார காலத்துக்கு பின் கொரோனா தொற்று தீவிரமடைந்த பின் மருத்துவமனைக்கு வருவதால், உயிரைக் காப்பதில் சிக்கல் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர் தொண்டு நிறுவனத்தினர்.

  எனவே உடல் சோர்வு, காய்ச்சல், தலைவலி, வாசனையின்மை, பசியின்மை ஏற்பட்டவுடன், முதியவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆரம்ப அறிகுறிகளுடன் உள்ள முதியவர்கள், சித்த மருத்துவத்தின் வழியாகவும் குணமடையலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

   
  Published by:Vijay R
  First published: