ஹோம் /நியூஸ் /கொரோனா /

தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் கிடைக்கும் பலன்கள் என்ன ?

தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் கிடைக்கும் பலன்கள் என்ன ?

கொரோனா

கொரோனா

தடுப்பூசி போடப்பட்ட தாய்மார்களின் தாய்ப்பால் மேலும் குழந்தை மற்றும் தாயை வைரஸில் இருந்து காப்பாற்ற நோய் எதிர்ப்பு கொண்டு உள்ளது .

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

இந்த பெருந்தொற்று ஒவ்வொரு மூலையிலும் பல தவறான கருத்துக்களை கொண்டு வந்துள்ளது. கோவிட் - 19-ற்கு எதிரான போராட்டத்தில் எட்டப்படும் ஒவ்வொரு படிகளிலும், ஒவ்வொரு மூடநம்பிக்கை, வேகமாக புதியதாக முளைக்கும் மக்கள் கூட்டத்தை குறிவைக்கிறது. இதில் குழந்தை சுமக்கும் வயதில் இருப்பவர்கள் பெரும்பான்மை. இந்த தவறான தகவலான எந்த ஒரு தடுப்பூசியும் கரு உருவாதல், கருத்தன்மை மற்றும் பிரசவத்தை அபாயத்திற்குள்ளாக்குகிறது.

இந்த ஒரு தகவல் மட்டும் பல லட்சம் பெண்கள் மற்றும் குடும்பத்தை பாதிக்கும் திறன் கொண்டது. கோவிட் பாலினம் சார்ந்து தாக்காத, தனிமனிதர்களை யாவரையும் தாக்கும் பொழுதிலும் பெண்களை விட ஆண்கள் அதிகம் தடுப்பூசிக்கு பதிவு செய்வதில் முடிந்து உள்ளது. தடுப்பூசி வந்த புதியதில், கர்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பாதுகாப்பு பற்றிய தகவல்கள் அளவாகவே இருந்தது, அதனால், சில காலம் மட்டும் அவர்களை ஊசி போடாமல் இருக்க சொன்னார்கள். ஆனால், ஆராய்ச்சி ரீதியான உண்மை வர தாமதம் ஆன பொழுதிழும், சமூகத்தில் தடுப்பூசி பற்றிய தயக்கம் அதிகமானது. நல்லபடியாக, சமீபத்திய பெண்களுக்கான தடுப்பூசி இருப்புகளும் ஆகஸ்ட் மாதம் - உலக தாய்ப்பால் மாதமும் ஒன்று சேர பல விவாதங்களை உருவாக்கியது.

ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் முதல் வாரம் தாய்ப்பால் வார விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது, மேலும் ஆகஸ்ட் மாதம் தாய்ப்பால் மாதமாக கொண்டாடப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு பொருளாக “தாய்ப்பால் பாதுகாப்பது: பகிரப்பட்ட பொறுப்பு”. குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருதல் மற்றும் குழந்தைகள் முழு நலத்தில்  தாய்மார்கள் மற்றும் பொதுமக்களின் ஒன்றிய ஒத்துழைப்பு தருவதை நோக்கமாக கொண்டுள்ளது. தாய்ப்பால் தருவதில் பல நன்மைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, தாய்மார்களுக்கு, மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைகிறது மற்றும் குழந்தைகளுக்கு இடையில் இடைவெளி தருகிறது. குழந்தைகளுக்கு, அவர்களின் நோய் எதிர்ப்பு திறனை வளர்த்து பல்வேறு நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து மூளை வளர்ச்சியை அதிகப்படுத்தும். தாய்ப்பால் தான் ஒரு சிசுவின் சாதாரண வளர்ச்சி மற்றும் நலமான வளர்ச்சிக்கு அதிக சத்து நிறைந்த உணவு. அதில் சிசுக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்கப்படுத்தி கிருமிகளுக்கு எதிராக போராட நோய் எதிர்ப்பு சக்திகள் பல உள்ளது. உலக சுகாதார நிலையம் (WHO) பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் தருவதை பரிந்துரைக்கிறது மேலும் வாழ்க்கையின் முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும், அதனை தொடர்ந்து இணை உணவுடன் 2 ஆண்டுகள் வரை அல்லது அதற்கு மேல் வரை தாய்ப்பால் தர வேண்டும். 1  இருப்பினும், தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத தாய்மார்களுக்கு, இறுதியில் பல புரளிகள் காரணமாக இது குழந்தைகளுக்கு எதிரானது அல்ல என்பதை ஏற்க சிரமப் படுகின்றனர்.  தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நிலையோடு பால் புகட்டுதலையும் இது நிறுத்தி உள்ளது. தொழில் நுட்பம் மற்றும் உறுதியான தகவல்கள் இல்லாத ஊரக இந்தியா பகுதிகளில் இது அதிகமாக இருக்கிறது.

அதிகார சமூக நல சேவையாளர்கள் (ASHA), கூடுதல் நுர்ஸ் செவிலி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் அயராது இந்த புரளிகளை உடைக்க போராடுகிறார்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என இருவரும் அவர்களுக்கான நலம் மற்றும் ஊட்டச்சத்தை பெறுவதற்கு போராடுகிறார்கள். அறிவியல் தடுப்பூசி தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அல்லது மனித பால் பெரும் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் தராது என காட்டி உள்ளது. 2

 WHO மற்றும் UNICEF பொறுத்தவரை அனைத்து தாய்மார்களும், கோவிட் - 19 அறிகுறி உள்ள தாய்மார்கள் உட்பட, அவர்களின் சிசுக்கள் அல்லது இளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரலாம் என கூறி உள்ளது. கோவிட் - 19 உருவாக்கும் கொரோனா வைரஸ் ஸ்ட்ரைன் தாய்ப்பாலில் தெரிவது இல்லை. சில ஆராய்ச்சிகளில், டாக்டர்கள் பரிந்துரைத்த பாதுகாப்புகளை கடைபிடித்து கோவிட் - 19 தொற்று வந்தாலும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். தாயின் கோவிட் நிலை எவ்வாறாக இருப்பினும் தாய்ப்பால் கொடுக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கோவிட் - 19 தடுப்பூசிகளில் இதுவரை நடந்த ஆராய்ச்சிகள் மற்றும் செய்திகள் பொறுத்து கோவிட் -19 தடுப்பூசி எவ்வாறு வேலை செய்கிறது மற்றும் தடுப்பூசி போட்டுக் கொண்ட பாலூட்டும் தாய்மார்களின் சிசுகளுக்கு தாக்காது என தெரிகிறது. தடுப்பூசி போடப்பட்ட தாய்மார்களின் தாய்ப்பால் மேலும் குழந்தை மற்றும் தாயை வைரஸில் இருந்து காப்பாற்ற நோய் எதிர்ப்பு கொண்டு உள்ளது .4,5,6  WHO -வின் தற்போதைய வழிமுறை தாய்மார்கள் கீழ் கண்ட பாதுகாப்பு முறைகளுடன் தாய்ப்பால் கொடுக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது:

  • பால் புகட்டும் பொழுது சுத்தமாக இருக்கவும், முக கவசம் அணிந்து அல்லது வாய் மற்றும் மூக்கை முடிக் கொண்டு.
  • குழந்தைகளை தொடுவதற்கு முன்பும், பின்பும் 20 வினாடிகள் வரை தண்ணீர் மற்றும் சோப்பு போட்டு கைகளை கழுவுதல்
  • அடிக்கடி சுத்தம் செய்து மற்றும் தொடும் தரைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யவும்.

உலக தாய்ப்பால் மாதம் பாலூட்டும் தாய்மார்கள் மத்தியில் தடுப்பூசி தொடர்பானவற்றை ஊக்கப்படுத்த தற்போது ஒரு உந்து சக்தியாக இருக்கும்.

ரேணுகா பிர்கோடியா, ஒருங்கிணைப்பாளர், யுனைடெட் வே மும்பை & தாரா ரகுநாத், ஒருங்கிணைப்பாளர், யுனைடெட் வே மும்பை

 பரிந்துரைகள் : 1.http://apps.who.int/iris/bitstream/10665/42590/1/9241562218.pdf

2. https://www.unicef.org/vietnam/stories/frequent-asked-questions-covid-19-vaccines-and-breastfeeding

3.https://www.euro.who.int/en/media-centre/sections/press-releases/2021/who-recommends-continuing-breastfeeding-during-covid-19-infection-and-after-vaccination

4. https://news.harvard.edu/gazette/story/2021/03/study-shows-covid-19-vaccinated-mothers-pass-antibodies-to-newborns/

5.https://www.cedars-sinai.org/blog/newborn-covid-19-immunity.html

6. https://www.news-medical.net/news/20210407/COVID-19-antibodies-persist-in-breast-milk-for-months-following-mothere28099s-vaccination.aspx

First published:

Tags: Corona, CoronaVirus