ஹோம் /நியூஸ் /கொரோனா /

இந்தியாவில் தடுப்பூசி 2 டோஸ் போட்டுக் கொண்டாலும் முகக்கவசம் அணிவதை நிறுத்தக்கூடாது - மருத்துவர்கள் எச்சரிக்கை

இந்தியாவில் தடுப்பூசி 2 டோஸ் போட்டுக் கொண்டாலும் முகக்கவசம் அணிவதை நிறுத்தக்கூடாது - மருத்துவர்கள் எச்சரிக்கை

மாஸ்க் அணிவது கட்டாயம்

மாஸ்க் அணிவது கட்டாயம்

கொரோனா பெருந்தொற்றுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும், இந்தியாவில் முகக்கவசங்கள் அணிவதை நிறுத்தக்கூடாது என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அமெரிக்காவில் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.  மேலும் அந்நாட்டில் 45 விழுக்காடு பெரியவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுகொண்டுள்ளதாகவும், 60 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவை பொறுத்தவரை 15 விழுக்காடு பெரியவர்கள் மட்டுமே ஒரு டோஸ் போட்டுக்கொண்டுள்ளதாகவும், அதில் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் வெறும் 4 சதவீதம் மட்டுமே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.  இதனால் நாடு முழுவதும் மொத்தம் மூன்று விழுக்காடு அளவுக்கே முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள், 80 விழுக்காடு அளவுக்கே திறன்வாய்ந்ததாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. next உருமாறிய கொரோனாவுக்கு இந்த தடுப்பூசிகள் எந்தளவு பாதுகாப்பானவை என்று கூறமுடியாது என்று எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்திருந்த நிலையில், முகக்கவசங்களே மக்களின் பாதுகாப்பாக பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி செஷல்ஸ் தீவுகளில் 60 சதவீதம் அளவுக்கு தடுப்பூசி பணிகள் நிறைவடைந்தும், அங்கு இரண்டாவது அலை இம்மாதத்தில் வேகமாக பரவி வருவதும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.  இதுதொடர்பாக தி எகானமிஸ்ட் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில்,லண்டனில் கோவிஷீல்டு 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 15 பேர்களுக்கு, உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர்கள் குணமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

எனவே தடுப்பூசிகள் பாதிக்கப்பட்டவரின் உயிரை பாதுகாக்கும் என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள்,  இருந்தபோதிலும் பாதிக்கப்பட்டவரின் மூலம் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எளிதாக கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடும் எனவும் எச்சரிக்கின்றனர்.  இதனால் ஒருவர் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், தனக்காகவும், பிறருக்காகவும் முகக்கவசம் அணிவதை அவசியமாக தொடர வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளனர்

First published:

Tags: Corona Vaccine, CoronaVirus