கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி கருத்து

எடப்பாடி பழனிசாமி

சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும் என பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 • Last Updated :
 • Share this:
  தென் மாவட்டங்களில் கொரோனா தடுப்புப் பணிகள் பற்றி ஆய்வை முடித்துக் கொண்டு சேலம் திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகையில் தொற்று தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதில், ஆட்சியர் ராமன், மாநகராட்சி ஆணையர் சதீஷ், காவல் ஆணையர் செந்தில்குமார் மற்றும் சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

  அப்போது பேசிய முதலமைச்சர், கொரோனா தடுப்புப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதால் சேலத்தில் தொற்று பரவல் குறையத் தொடங்கியிருப்பதாகக் கூறினார். அரசுத் திட்டங்கள் தொய்வில்லாமல் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘கொரோனா பரவல் குறைந்த பின் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் உருவான பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்றார்.

  Also read: தற்காலிக நீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும் - ஸ்டாலினுக்கு கு.க.செல்வம் கடிதம்

  தேர்தல் பிரச்சாரத்திற்கே வராத எஸ்.வி.சேகர் அரசியல் கட்சியில் இருக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வியெழுப்பிய முதலமைச்சர் பழனிசாமி, எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி பற்றி தேர்தல் நெருக்கத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

  மேட்டூர் அணையில் நீர் மட்டம் உயரத் தொடங்கிய பிறகு கிழக்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் எனக் கூறிய முதலமைச்சர், மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார். மேலும், கொரோனா தொற்று குறையக் குறைய படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதையும் குறிப்பிட்டார்.
  Published by:Rizwan
  First published: