corona virus in India |எங்கள் எச்சரிக்கை பிரதமர் மோடியைச் சென்றடையவில்லை என்பதை நம்ப முடியவில்லை: விஞ்ஞானிகள் வேதனை

பிரதமர் நரேந்திர மோடி

உருமாறிய புதுவகை கொரோனாவின் வேகமான பரவல் அபாயம் இந்தியாவுக்கு உள்ளது என்று மார்ச் மாதமே எச்சரித்தோம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3.82 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுவரை கொரோனாவிலிருந்து 1.6 கோடிக்கும் அதிகமான நபர்கள் குணமடைந்துள்ளனர்.

    தற்போது 34 லட்சத்துக்கு அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் 3,780 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,26,188 ஆக அதிகரித்துள்ளது.

    இதுவரை மொத்தம் 15 கோடிக்கும் மேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தனியார் செய்தி ஊடகத்துக்கு மத்திய மூலக்கூறு உயிரியல் மையத்தின் இயக்குனர் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா அளித்த பேட்டியில், “நாங்கள் கொரோனா பரவல்குறித்து முன்னரே குரல் எழுப்பினோம்.

    நாம் ஆபத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறோம் என்று எச்சரித்தோம் இது தொடர்பாக மத்திய சுகாதார செயலாளரிடம் தெரிவிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். ஆனால் அத்தகவல் பிரதமர் மோடியிடம் சென்றடையவில்லை என்பதை நம்ப முடியவில்லை.

    அதிகப்படியான தொற்று பரவல் வைரஸ் உருமாற்றத்திற்கான வாய்ப்பை அதிகரிக்கும். ராய்ட்டர்ஸில் இது குறித்து செய்தி வெளியானது. ஆனால் இந்திய ஊடகங்கள் அதனை கருத்தில் கொள்ளவில்லை.

    உருமாற்ற அடைந்த கொரோனா வைரஸ் காரணமாக இந்தியவில் தொற்று மற்றும் பலி எண்ணிகை அதிகரிக்கும் என்று நாங்கள் முன்னரே மத்திய அரசை எச்சரித்தோம்.

    உருமாறிய கொரோனா வைரஸ் வகை வேகமாகப் பரவக்கூடியது. அதன் மிகை வளர்ச்சி கவலைக்குரியது என்று எச்சரித்தோம். இது அபாயகரமானது, இறப்பு விகிதம் அதிகரிக்கும் என்றோம்” என்றார்.

    ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் திங்களன்று வெளியிட்ட பரபரப்பு செய்தியில் விஞ்ஞானிகள் எச்சரிக்கையை இந்திய அரசு புறக்கணித்தது என்றே சாடியுள்ளது.

    மார்ச் மாதம் மரபணு கூட்டமைப்பு உருமாறிய புதுவகை கொரோனாவின் ஆபத்து பற்றி மார்ச் மாதமே எச்சரித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது. அதாவது பிரதர் மோடியிடம் நேராகப் பேசும் டாப் அதிகாரிக்கு இதைத் தெரியப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடிக்கு இந்தத் தகவல் சென்றதா என்று ராய்ட்டர்ஸ் பிரதமர் அலுவலகத்தில் கேட்ட போது அங்கிருந்து பதில் இல்லை என்பதையும் இந்த ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்துள்ளது.

    மார்ச் 10ம் தேதியே இந்த எச்சரிக்கையை விஞ்ஞானிகள் மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

    அதாவது, E484Q மற்றும் L452R, என்ற இரண்டு வகை உருமாறிய கொரோனா வைரஸ் பெரிய கவலையளிக்கக் கூடியது என்றும் இதில் குறிப்பிட்ட முதல் வகை உருமாறிய கொரோனா பெரிய அளவில் கொரோனாவை வீரியமிழக்கச் செய்யும் ஆண்டிபாடிகளையும் மீறி தொற்றும் என்றும் இன்னொரு வகை அதிகம் பேரை தொற்றக்கூடியது என்றும் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் முறியடித்து உள்ளே நுழையும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. "
    Published by:Muthukumar
    First published: