பட்டினியால் வாடும் ஒவ்வொரு மனிதனுக்கும் உதவவேண்டும் - சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மு.க ஸ்டாலின்..!

மு.க.ஸ்டாலின்.

அனைவரும் ஒன்றிணைவோம் வா என்ற தலைப்பில் மக்கள் பணியாற்றுவோம் என அழைக்கிறேன்.

 • Share this:
  பட்டினியால் வாடும் ஒவ்வொரு மனிதனுக்கும் நாம் உதவ வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

  வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ”பசி பட்டினியால் வாடும் ஒவ்வொரு மனிதனுக்கும் நாம் உதவ வேண்டும். ஒரு கை தட்டினால் ஓசை வராது, தனித்தனியாக உதவிகள் செய்யாமல் ஒன்றிணைந்து மக்களுக்கு உதவவேண்டும். திமுகவினர் ஆற்றும் களப்பணிகளைப் பார்க்கும்போது உங்களுள் ஒருவன் என்ற எண்ணம் பெருமையளிக்கிறது.

  சாதிமதம் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் உதவ வேண்டும். அனைவரும் ஒன்றிணைவோம் வா என்ற தலைப்பில் மக்கள் பணியாற்றுவோம் என அழைக்கிறேன்.

  மக்களுக்கு உதவுவதில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் என் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும். தொற்றுநோய் என்பதாலும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதாலும் ஊரடங்கு தான் முதல் தடுப்புக் காவல். எனவே தனிமைப்படுத்திக் கொள்வோம்.”

  இவ்வாறு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அவர் பேசினார்.

  Also see:
  Published by:Rizwan
  First published: