உங்களுக்காக சேவை செய்ய நாங்கள் இருக்கிறோம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

முதலமைச்சர் கூறிய படி விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு என்ற வாசகத்தின் படி நடந்து கொள்ள வேண்டுகிறோம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உங்களுக்காக சேவை செய்ய நாங்கள் இருக்கிறோம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
முதலமைச்சர் கூறிய படி விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு என்ற வாசகத்தின் படி நடந்து கொள்ள வேண்டுகிறோம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  • Share this:
உங்களுக்காக சேவை செய்ய நாங்கள் இருக்கிறோம். நீங்கள் அரசு உத்தரவை மதித்து நடந்து கொள்ளுங்கள் என்று பொதுமக்களுக்கு போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கரூர் மாவட்டத்தில் 45 நபர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இன்றுவரை 22 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் 144 தடை உத்தரவை மதிக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில், “கரூர் மாவட்ட மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள், உங்களுக்காக பணியாற்ற கூடிய பணியாளர்கள் சிரமமின்றி தங்கள் பணிகளை செய்வதற்கு வசதியாக, நாம் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள் கிடைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

முதலமைச்சர் கூறிய படி விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு என்ற வாசகத்தின் படி நடந்து கொள்ள வேண்டுகிறோம்.மருத்துவதுறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை என அனைத்து துறை ஊழியர்களும் தங்களது குடும்பத்தாரை விட்டு இரவு பகலாக, மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சேவையை மதித்து நாம் அனைவரும் வீட்டில் இருந்து வெளியே வருவதை தவிர்த்து விடுமாறு உங்களுக்கு அன்பான வேண்டுகோள் வைக்கிறேன்.

உங்களுக்காக சேவை செய்ய நாங்கள் இருக்கிறோம். நீங்கள் தடை உத்தரவை மதித்து நடந்து கொள்ளுங்கள்”
இவ்வாறு போக்குவரத்துறை அமைச்சர் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

Also see...சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading