• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • நெல்லை மாநகர எல்லையில் உயர் கோபுரம் அமைத்து வாகனங்கள் கண்காணிப்பு!

நெல்லை மாநகர எல்லையில் உயர் கோபுரம் அமைத்து வாகனங்கள் கண்காணிப்பு!

நெல்லை மாநகர எல்லையில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுரம்.

நெல்லை மாநகர எல்லையில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுரம்.

நெல்லையில் 63 பேர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • Share this:
நெல்லை மாநகர எல்லையில் உயர் கோபுரம் அமைத்து வாகனங்கள் கண்காணிக்கப்படுவதாக காவல்துறை துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 63 பேர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களிலும் ஒருவர் தவிர நான்கு பேர் அடுத்த இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர். இந்த நிலையில் மற்ற மாவட்டங்களில் இருந்து நெல்லை மாநகர பகுதிக்குள் சரக்கு வாகனங்களில் பொதுமக்கள் வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதைக் கண்காணிக்கும் நோக்கில் நெல்லை மாநகர எல்லையான கரையிருப்பு சோதனைச் சாவடியில் உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 24 மணி நேரமும் காவலர் பணியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து மாநகர எல்லைக்குள் நுழையும் பகுதி என்பதால் காவல் துறையினர் விழிப்புடன் கண்காணிப்பார்கள் என்றும் அவ்வாறு சரக்கு வாகனங்களில் வருபவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்கள் 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்றும் சோதனைச் சாவடியை ஆய்வுசெய்த காவல்துறை துணை ஆணையர் சரவணன் தெரிவித்தார். மேலும் மாநகர பகுதிக்குள் தேவையின்றி அலைந்து திரிபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வருவதாக அவர் கூறினார்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: