முகப்பு /செய்தி /கொரோனா / அடுத்த 2 அல்லது 4 வாரத்தில் கொரோனா 3ஆவது அலை தாக்கலாம் - மகாராஷ்டிரா நிபுணர் குழு எச்சரிக்கை

அடுத்த 2 அல்லது 4 வாரத்தில் கொரோனா 3ஆவது அலை தாக்கலாம் - மகாராஷ்டிரா நிபுணர் குழு எச்சரிக்கை

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

கொரோனா 2ஆவது அலையை விட, இரண்டு மடங்கிற்கும் அதிகமானோர் 3ஆவது அலையில் பாதிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

மகாராஷ்டிராவில் இன்னும் 2 அல்லது 4 வாரத்திற்குள் கொரோனா 3ஆவது அலை தாக்கும் என்றும், 2ஆவது அலையை விட இரண்டு மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. அங்கு தற்போது 2ஆவது அலை பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா 3ஆவது அலை தாக்குதல் ஏற்படலாம் என கருதப்படும் நிலையில், இது குறித்து அம்மாநில முதலமைச்சர் உத்தவ்தாக்கரே, மகாராஷ்டிரா மாநில மருத்துவ கட்டுப்பாட்டு குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது, மராட்டிராவில் இன்னும் 2 அல்லது 4 வாரத்திற்குள் கொரோனா 3ஆவது அலை தாக்கும் என்றும், இதில் கொரோனா 2ஆவது அலையை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவார்கள். எனவே முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை விரிவாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கட்டுப்பாட்டு குழுவினர் சில அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்தனர்.

கொரோனா 2ஆவது அலை உச்சத்தில் இருந்தபோது, மராட்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 8 லட்சம் பேர் ஒரே நேரத்தில் சிகிச்சையில் இருந்தனர். பின்னர் படிப்படியாகக் குறைந்து, தற்போது அங்கு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரமாக குறைந்துள்ளது.

கொரோனா 2 ஆவது அலையில் மட்டும் மராட்டியத்தில் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். முதல் அலையில் 19 லட்சம் பாதிக்கப்பட்டனர். தற்போது 3ஆவது அலை இரு மடங்கு அதிகமாக இருக்கும் என்பதால் 80 லட்சம் பேருக்கு மேல் பாதிப்பைடைய வாய்பிருப்பதாக கருதப்படுகின்றது. 3ஆவது அலையில்10 சதவீதத்துக்கு மேல் சிறுவர்கள் மற்றும் சிறுவயது இளைஞர்கள் பாதிக்கப்படலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Must Read : ‘முதல்வர் ஸ்டாலின் ஹெல்தில் தனிகவனம்’ - கனிமொழி இல்லத்தில் துர்கா ஸ்டாலின் தயார் செய்த உணவுகள்

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து அதிகரிப்பட்டடு வருவதால், எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரித்து, பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றும் கருதப்படுகின்றது. இங்கிலாந்தில் கொரோனா 3ஆவது அலை தாக்கத் தொடங்கிவிட்டதால். 2ஆவது அலை முடிவுக்கு வந்த 4 வாரத்திலேயே, 3ஆவது அலை தாக்கியது. அதே நிலைதான் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்திலும் ஏற்படும் என நிபுணர் குழுவினர் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், நாட்டு மக்கள் அனைவரும் விரைவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: CoronaVirus, Covid-19, Maharashtra