தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. எனினும், கடந்த சில மாதங்களுக்கு முன் நோய் தொற்று உச்சத்தில் இருந்த போது மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிந்தன. சிகிச்சை பெறும் நோயாளிகளை கவனிப்பதற்காக வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்ததால், கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்தது. அதேநேரம் ஏராளமான கொரோனா தொற்றாளர்கள், கவனித்துக் கொள்ள ஆளின்றி தவித்தனர்.
இந்நிலையில் நோயாளிகளுக்கு உதவுவதற்காக, தமிழ்நாட்டின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில், சென்னையை சேர்ந்த சாந்தி மற்றும் ஹரிகிருஷ்ணன் தலைமையில் தன்னார்வலர்கள் களம் இறங்கினர். குறிப்பாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் 28 தன்னார்வலர்கள், நோயாளிகளை கனிவுடன் கவனித்து வருகின்றனர். முழு கவச உடை அணிந்து, நோயாளிகளுக்கு உணவு வாங்கி கொடுப்பது, உரிய நேரத்தில் மருந்து, மாத்திரைகளை அளிப்பது போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.
ஊதியம் ஏதுமின்றி தன்னெழுச்சியாக இப்பணியை தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவ, மாணவிகள், தனியார் துறை ஊழியர்கள் ஆகியோர் தினசரி இருமுறை சுழற்சி அடிப்படையில், பணியாற்றுகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும் படிக்க..
Petrol Diesel Prices | தொடர்ந்து உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை... இன்றைய நிலவரம் என்ன?
முன்பை விட தற்போது நோய் தொற்று படிப்படியாக குறைந்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர். மாநிலம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், சேவையாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நோய் தொற்று அச்சமின்றி, நோயாளிகளுக்கு உதவும் தன்னார்வலர்களின் சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.