கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித் திரியும் 400 தெரு நாய்களுக்கு தன்னார்வலர்கள் தினசரி 2 நேரம் உணவு வழங்கி வருகின்றனர்.
கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 400 தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவைகளுக்கு நகரில் உள்ள எபெக்ட் தொண்டு நிறுவனம் மற்றும் வன விலங்குகள் அமைப்பினர் தினசரி 2 நேரம் உணவுகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தயாரித்து வழங்கி வருகின்றனர்.
ஏற்கனவே இவற்றிற்கு உணவு என்பது ஓட்டல் கழிவுகள் மற்றும் சுற்றுலாபயணிகள் விட்டுச்செல்லும் உணவு பொருட்கள்தான். தற்போது சுற்றுலாபயணிகள் வருகை முற்றிலும் இல்லை. மேலும் ஓட்டல்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் உணவுக்கு அங்கும் இங்கும் அலையும் நிலை தெருநாய்களுக்கு ஏற்பட்டது. இருந்தபோதும் உணவு கிடைத்தபாடில்லை.
இதையறிந்த கொடைக்கானலை சேர்ந்த எபெக்ட் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த வீரபத்ரன், அவரது நண்பர்கள் மற்றும் தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள் உதவியுடன் தெருநாய்களுக்கு உணவளிக்க திட்டமிட்டனர். இதற்காக அரசு அதிகாரிகளிடம் முறையாக அனுமதியும் பெறப்பட்டது.
தினமும் உணவு சமைத்து வாகனத்தில் சென்று நாய்கள் அதிகம் உலாவரும் இடத்தில் உணவு பொட்டலங்களை பிரித்து வைக்கின்றனர். இதற்காக ஏழுபேர் கொண்டு குழு அமைத்து நகர் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று நாய்களுக்கு உணவளிக்கின்றனர்.
இது குறித்து தொண்டு நிறுவனத்தினை சேர்ந்த வீரபத்திரன் கூறியதாவது, கொரானா வைரஸ் ஊரடங்கால் தெருவிலங்குகள் என கூறப்படும் நாய்கள் பசியால் வாடுவதை தவிர்க்க நண்பர்கள் உதவியுடன் அவற்றிற்கு தனியாக சமையல் செய்ய தொடங்கினோம்.
இந்த முயற்சிக்கு கொடைக்கானல் நகரை சேர்ந்த பலரும் ஆதரவு தந்தனர், உதவியும் செய்தனர். கொடைக்கானலில் 400 க்கு மேற்பட்ட நாய்களுக்கு தினமும் ஒரு நாய்க்கு 800 கிராம் அளவிற்கு சாதம் வழங்கிவருகிறோம். மேலும் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளுக்கும் உணவளிக்கின்றோம் . இது ஊரடங்கு முடியும் வரை தொடரும் ன கூறினார் .
மேலும் தங்கள் பகுதி தெருநாய்களை அந்தந்த பகுதி மக்களே கவனித்துக்கொள்ளும் வகையில், வீட்டுவாசல்களில் மீதமான உணவுகளை வைத்துவிட்டால் அப்பகுதி நாய்கள் உணவை உண்டு பசியாரும். இதனால் எங்களைப்போன்றவர்களின் உதவிதேவைப்படாது.
அந்தந்த பகுதிமக்களே தெருநாய்களின் பசியை போக்கவேண்டும் என்பதை ஒரு வேண்டுகோளாக வைக்கிறோம் என்றார். தினசரி இரண்டு நேரம் நாய்களுக்கு உணவு வழங்குவதின் காரணமாக அவற்றின் சப்தம் கேட்காமல் இரவு நேரங்களிலும் நகரம் அமைதியாக உள்ளது.
மேலும் உள்ள வன விலங்குகளும் இயற்கையான உணவுகளை உண்ணுவதற்கு பழகி விட்டன. நாய்களுக்கு உணவு வழங்குவதற்கு பல்வேறு தரப்பினரும் உதவி செய்வதுடன் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also see...
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dog, Kodaikanal