• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • அரசு அளித்த அனுமதிக் கடிதம்: கொரோனா பாதிப்பால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த தன்னார்வலர்கள்...

அரசு அளித்த அனுமதிக் கடிதம்: கொரோனா பாதிப்பால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த தன்னார்வலர்கள்...

கொரோனா நோயால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த  தன்னார்வலர்கள்

கொரோனா நோயால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த  தன்னார்வலர்கள்

கொரோனாவால் இறப்பவர்களின் உடலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னார்வலர்களிடம்  அரசு அனுமதி கடிதத்தை வழங்கினால் அவர்களே அடக்கம் செய்து வருகின்றனர்.

  • Share this:
கொரோனாவால் இறப்பவர்களின் உடலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னார்வலர்களிடம்,  அரசு அனுமதி கடிதத்தை வழங்கியதைத் தொடர்ந்து இறந்தவரின் உடலை அவருடைய மதத்தின் அடிப்படையில் அரசுடன் இணைந்து அவர்கள் இறுதி மரியாதை செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் குமளம் கிராமத்தை சேர்ந்த 82 வயது முதியவர் புதுச்சேரி மருத்துவமனையில் இறந்தார். அவருக்கு  கொரோனா  நோய் உறுதியானது. இதனால் கொரோனாவால் இறப்பவர்களின் உடலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னார்வலர்களிடம்  அரசு அனுமதி கடிதத்தை வழங்கியதைத் தொடர்ந்து இறந்தவரின் உடலை அவருடைய மதத்தின் அடிப்படையில் அரசுடன் இணைந்து அவர்கள் இறுதி மரியாதை செய்தனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் புதுச்சேரி பகுதி தலைவர் அஹமது அலி தலைமையில் செயல்பட்ட இந்த தன்னார்வ குழுவினருக்கு புதுச்சேரி அரசு வழங்கிய COVID-19 (full kit) பாதுகாப்பு உடையுடன் அரசு அதிகாரிகள் அறிவுறுத்தலின்படியும் மற்றும் செயலாளர் ரபீக் மன்சூர்,அமீன் பாஷா, ஆதில், ஜின்னா, முஹம்மது கவுஸ் ஆகியோர்  ஒத்துழைப்போடு  தகனம் செய்யப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் முழுவதும் கிருமிநாசினி தெளித்து  சுத்தம் செய்யப்பட்டது.

மேலும் படிக்க...

ஆசிரியர் தேர்வில் மோசடி : முதலிடம் பிடித்தவருக்கு இந்திய ஜனாதிபதி பெயர் கூட தெரியாத அவலம்

 






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: