Vaccination : டெல்டா பிளஸ் வைரஸ் கண்காணிக்கப்படுகிறது... தடுப்பூசி போடும் பணிகள் புது வேகத்துடன் விரைவுபடுத்தப்படும் - வி.கே.பால்

நிதிஆயோக் உறுப்பினர் வி.கே.பால்

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை துவங்கினாலும், தொற்று தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் தனி மனித இடைவெளி கடைப்பிடிப்பதை நிறுத்தக் கூடாது.

  • Share this:
    டெல்டா பிளஸ் புதிய வகை வைரஸ் தொற்றின் விளைவுகளை மத்திய அரசு கண்காணித்து வரும் நிலையில், வரும் வாரங்களில், தடுப்பூசி போடும் பணிகள் புது வேகத்துடன் விரைவுபடுத்தப்படும் என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் கூறுகையில் “ கொரோனா தொற்று பரவல் பெரும் அளவில் குறைந்துள்ளது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு அதிக வீரியத்துடன் பரவும் தொற்றை நாம் எதிர்கொண்டு வருகிறோம். எனவே, தொற்று தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை துவங்கினாலும், தனி மனித இடைவெளி கடைப்பிடிப்பதை நிறுத்தக் கூடாது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அமெரிக்காவின், 'நோவாவாக்ஸ்' தடுப்பூசி, மிகவும் பாதுகாப்பானது மற்றும் அதிக செயல்திறன் உடையது என்பதை, இதுவரையிலான ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இது, நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. டெல்டா பிளஸ் வகை தொற்று, மார்ச்சிலேயே கண்டறியப்பட்டது. இது கவலைக்குரிய வகையாக உருவெடுக்கவில்லை. இந்த புதிய வகை வைரசின் விளைவுகளை, மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. வரும் வாரங்களில் தடுப்பூசி போடும் பணிகள் புது வேகத்துடன் விரைவுபடுத்தப்பட உள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் “தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. அதற்காக கொரோனா ஒழிந்து விட்டதாக அர்த்தம் அல்ல. கொரோனா நம்முடன்தான் இருக்கிறது. தொடர்ந்து இருக்கும்.இந்த சூழ்நிலையில் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிப்பதுடன், அனைவரும் கூடிய விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இல்லாவிட்டால், யாருமே பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள். உங்களை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

    Must Read : இதை செய்யாவிட்டால் 2ஆவது அலையை விட மோசமான நிலை ஏற்படும் - மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

    இதற்கிடையில், மும்பை மாநகராட்சி, 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக மாநகராட்சி தற்போது மும்பையில் உள்ள தடுப்பூசி மையங்களை 2 மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. மும்பையில் தற்போது 259 தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஒரு நாளில் 31 ஆயிரத்துக்கும் மெற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட முடியும். இந்த மையங்களை இம்மாதம் 21ஆம் தேதி முதல் 500 ஆக அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டு அதற்கான ஆயத்த பணிகளில் இறங்கியுள்ளது. இதனால், ஒரு நாளில் சுமார் 55 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட முடியும் என்று கூறப்படுகின்றது.
    Published by:Suresh V
    First published: