Home » News » Coronavirus-latest-news » VIRUDHACHALAM TALUK OFFICER DEATH FOR CORONA VIRUS VJR

விருத்தாசலம் வட்டாச்சியர் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..

வட்டாட்சியர் ஒருவர் உயிரிழந்திருப்பது கடலூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருத்தாசலம் வட்டாச்சியர் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..
விருத்தாசலம் வட்டாச்சியர்
  • Share this:
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த விருத்தாசலம் வட்டாட்சியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியராக கவியரசு(45) பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யபட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனயைில் உயிரிழந்தார். களப்பணியில் வருவாய்துறையினர் ஈடுபட்டு வருவதால் வட்டாட்சியர் ஒருவர் உயிரிழந்திருப்பது கடலூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் படிக்க:-

கொரோனா தொற்று காலம்: மூத்த குடிமக்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்..

தமிழகத்தில் இதுவரை கொரோனவால் 1,65,714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,13,856 பேர் குணமடைந்தும், 2403 பேர் உயிரிழந்தும் உள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் 4807 பேர் பாதிக்கப்பட்டும், 88 பேர் உயிரிழந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
First published: July 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading