அரசின் உத்தரவையும் மீறி தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ள வார்டுகளில் கர்பிணி செவிலியர்களுக்கு பணி

அரசின் உத்தரவை மீறி கர்பிணி செவிலியர்களுக்கு தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ள வார்டுகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

அரசின் உத்தரவையும் மீறி தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ள வார்டுகளில் கர்பிணி செவிலியர்களுக்கு பணி
கோப்புப்படம்
  • Share this:
கர்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களாக இருக்கும் சுகாதார பணியாளர்களை கொரோனா தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ள பகுதிகளில் பணியில் அமர்த்தக் கூடாது என தமிழக சுகாதாரத்துறை கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதை மீறி கர்பிணி மற்றும் பாலூட்டும் செவிலியர்கள் புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட தொற்று அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் பணியில் தொடர்ந்து அமர்த்தப்படுகிறார்கள். விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் எட்டு செவிலியர்கள், மகப்பேறு புறநோயாளி பிரிவு போன்ற வார்டுகளில் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.

இதற்கு முன்பாக அதே மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் பணிபுரிந்த செவிலியருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தாய்ப்பால் ஊட்டி வந்த தனது ஒன்பது மாத குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு மருத்துவமனையில் இரண்டு வார காலம் சிகிச்சைப் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு பின்னும் அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மேலும் எட்டு செவிலியர்களுக்கும் பாதுகாப்பான சூழல் இல்லை என்று அங்கு பணிபுரிபவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஏப்ரல் மாதம் 20-ம் தேதி வெளியிடப்பட்டிருக்கும் அரசு உத்தரவில் கர்பிணி பெண்கள், தொடர் சிறுநீரக கோளாறுகள் இருப்பவர்கள், கட்டுக்குள் இல்லாத சர்க்கரை நோய் உள்ளவர்கள் போன்ற ஒன்பது பிரிவினருக்கு மாதிரிகள் எடுப்பது, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் களப்பணி, புறநோயாளிகள் சேவை உள்ளிட்ட பணிகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது. அவர்களுக்கு கட்டுப்பாட்டு அறை, தகவல் மேலாண்மை போன்ற தொற்று ஏற்பட வாய்ப்பு குறைவான இடங்களில் பணி ஒதுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Also read: கொரோனா பரவலுக்கும் எனக்கும் தொடர்பா? - பில்கேட்ஸ் விளக்கம்

இதுகுறித்து விருதாச்சலம் மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநில செயலாளர் சாமிநாதன் நம்மிடம் பேசிய போது, “அரசு உத்தரவு எழுத்தில் மட்டுமே உள்ளது. இதுகுறித்து தலைமை மருத்துவருக்கு புகார் அளித்தும் அமல்படுத்தப்படவில்லை. மகப்பேறு விடுப்பு முடித்து பணிக்கு திரும்பிய செவிலியர் மகப்பேறு வார்டில் பணிக்கு அமர்த்ப்பட்டு தொற்று ஏற்பட்டு விட்டது. அவரது ஒன்பது மாத குழந்தைக்கு தாய்ப்பாலை நிறுத்த வேண்டியதாயிற்று. கர்பிணி செவிலியர்களை குழந்தைகள் பிரிவு, அல்லது தகவல் மேலாண்மை பிரிவில் பணி அமர்த்தினால் பாதுகாப்பாக இருக்கும். சுகாதாரத்துறையில் சுமார் 70% பணியாளர்கள் பெண்கள் ஆவர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்” என்றார்.
First published: July 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading