குப்பை சேகரிப்பவர் கைதட்டிய வீடியோவை பதிவிட்ட சேவாக்... பாராட்டை விட எதிர்ப்பே அதிகம்

குப்பை சேகரிப்பவர் கைதட்டிய வீடியோவை பதிவிட்ட சேவாக்... பாராட்டை விட எதிர்ப்பே அதிகம்
  • Share this:
கொரேனா வைரஸ் தடுப்பு மருத்துவ பணியாளர்களின் சேவையை பாராட்டும் விதமாக கௌரவிக்கும் விதமாக குப்பை சேகரிப்பவர் கைதட்டிய வீடியோவை பகிர்ந்த சேவாக் பதிவிற்கு எதிர்ப்பே அதிகமாக இருந்தது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்தும் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்தை தொட்டும் உள்ளது. சீனாவிற்கு அடுத்தப்படியாக இத்தாலி, ஈரான், தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் 344 பாதிக்கப்பட்டும் 7 பேர் உயிரிழந்தும் உள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுபடுத்த தேசிய ஊரடங்கு நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதன் முடிவில் கொரோனா தடுப்பு மருத்துவ பணியாளர்களின் சேவையை பாராட்டும் விதமாக கைதட்டி கௌரவமளிக்கப்பட்டது.


இந்தியா முழுவதும் பலர் கைத்தட்டி மருத்துவ பணியாளர்களுக்கு கௌரவம் செலுத்தினர். பிரபலங்கள் பலர் தங்கள் குடும்பத்தினர், தங்களை சார்ந்தவர்கள் உள்ளிட்டவர்கள் கைத்தட்டும் வீடியோவை பகிர்ந்தனர். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் குப்பை சேகரிப்பவர் கைத்தட்டும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.சேவாக் பதிவை தொடர்ந்து சாமானிய மக்கள் பலர் மருத்துவ பணியாளர்கள் சேவைக்கு கைத்தட்டும் வீடியோவை பதிவு செய்தனர்.

சேவாக் பதிவற்கு பாராட்டு ஒருபுறம் இருக்க அதற்கு எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. நீங்கள் ஒரு வீடியோவை பதிவு செய்யும் முன் அவரின் மனிதநேயத்தை பாராட்டுவதற்கு முன் அவருக்கு சரியான உதவியை செய்யலாம் என்று பதவிட்டுள்ளனர்.குப்பை சேகரிப்பவரின் மனிதநேயத்தை பாராட்டும் நீங்கள் அவருக்கு உதவுவதற்கு முன்வரலாமே என்ற கருத்துகளே அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
First published: March 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading