#IndiaGives : பிரைம் மினிஸ்டர் அங்கிளுக்கு உதவுங்க.. உண்டியல் சேமிப்பை கொடுத்த விழுப்புரம் சிறுமி

#IndiaGives : பிரைம் மினிஸ்டர் அங்கிளுக்கு உதவுங்க.. உண்டியல் சேமிப்பை கொடுத்த விழுப்புரம் சிறுமி
சிறுமி ஸ்பூர்த்தி
  • Share this:
கொரோனா நிவாரண நிதிக்காக தனது உண்டியல் சேமிப்பு பணத்தை விழுப்புரம் சிறுமி ஸ்பூர்த்தி கொடுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத்தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதுடன், அந்த வைரஸின் தொற்று காரணமாக பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் விழுப்புரத்தைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் ரகுநாதன் ஜெயபதி என்பவரது இரண்டரை வயது மகள் ஸ்பூர்த்தி தனது உண்டியல் பணத்தை பிரதமர் மற்றும் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதி திட்டத்திற்கு அனுப்பியுள்ளார்.


பிரதமர் தேசிய பேரிடர் திட்டத்திற்கு ரூ.2200-ம், தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 2220 ரூபாயையும் ஸ்பூர்த்தியின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது தந்தை இணையம் மூலம் அனுப்பியுள்ளார். இது குறித்து பேசிய ஸ்பூர்த்தியின் தந்தை ரகுநாதன், யாரையும் உண்டியை தொட அனுமதிக்க மாட்டார். ஆனால், கொரோனா தாக்கம் குறித்த செய்திகளைப் பார்த்துவிட்டு, என்னாச்சுப்பா என்று மகள் ஸ்பூர்த்தி கேட்டதாக சொல்கிறார் ரகுநாதன்.

தந்தையின் விளக்கத்திற்கு பிறகு, தனது சேமிப்பு உண்டியலை உடைத்து, பிரதமருக்கும், முதலமைச்சருக்கும் அனுப்ப விருப்பம் தெரிவித்தார் என்கிறார் அவர். சிறுமி ஸ்பூர்த்தி பேசும் மழலை கொஞ்சும் வீடியோ வைரலாக பரவிவருகிறது.







சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: March 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading