மருத்துவமனையில் இருந்து தப்பிய நபருக்கு கொரோனா தொற்று உறுதி - போலீசார் தீவிர தேடுதல்

மருத்துவமனையில் இருந்து தப்பிய நபருக்கு கொரோனா தொற்று உறுதி - போலீசார் தீவிர தேடுதல்
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: April 8, 2020, 7:23 PM IST
  • Share this:
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் இருந்து இன்று தப்பி ஓடிய 30 வயதாக நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவரை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில்  இன்று வரை 20 பேர் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தொற்று இருந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து அறிகுறிகளுடன் இருந்தவர்கள் இங்கே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த டெல்லியைச் சேர்ந்த 30 வயதான நபர் இன்று தப்பி ஓடியுள்ளார். அவரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதனை அடுத்து, அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி பக்கம் அவர் சென்றிருக்கலாம் என்ற தகவல்களின் அடிப்படையில் போலீசார் தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.

இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பி ஓடியவரை பார்த்தவர்கள் அல்லது அவரைப்பற்றி தகவல் தெரிவிக்க விரும்புவர்கள் 04146 223265 என்ற எண்ணுக்கு உடனடியாக மாவட்ட நிர்வாகத்தை தொடர்க்கொள்ள கேட்டுள்ளப்பட்டுள்ளது.




இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading