CoronaVirus : கொரோனாவால் நுரையீரல் பாதித்த மருத்துவருக்கு உதவ 20 லட்சம் ரூபாய் திரட்டிய கிராம மக்கள்

மனைவியுடன் மருத்துவர் பாஸ்கர் ராவ்

‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பது போல மருத்துவர் பாஸ்கர் ராவ் மக்களுக்குச் செய்த தன்னலம் பாராத உதவி அவருக்கு துணையாக அமைந்துள்ளது.

  • Share this:
ஆந்திரபிரதேச மாநிலத்தில் கொரோனாவால் நுரையீரல் பாதித்த மருத்துவருக்கு உதவ 20 லட்சம் ரூபாய் திரட்டி நெகிழ வைத்துள்ளனர் கரஞ்சேடு கிராம மக்கள்.

ஆந்திரபிரதேச மாநிலம், பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் பாஸ்கர் ராவ். 38 வயதான இவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி பாக்கியலட்சுமியும் மருத்துவர். பாக்கியலட்சுமி குண்டூர் மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் கரஞ்சேடு கிராம மக்களுக்கு இரவு, பகல் பாராமல் மருத்துவ சேவை புரிந்தனர். மேலும், கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், இருவருக்கும் ஏப்ரல் 24ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாக்கியலட்சுமி கொரோனாவில் இருந்து மீண்டார். ஆனால், பாஸ்கர்ராவ் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டார். அவர் முதலில் குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நுரையீரல் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், மேல் சிகிச்சைக்காக 2 கோடி ரூபாய் வரையில் செலவாகலாம் எனவும் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாஸ்கர் ராவ்வின் மனைவி பாக்கியலட்சுமி, தனது நண்பர்கள், உறவினர்கள் மூலமாக, பணத்தை திரட்டும் பணியில் ஈடுபட்டார் குறைந்த அளவிலான பணத்தையே அவரால் திரட்ட முடிந்தது.

இந்நிலையில், தன் கணவரை, ஹைதராபாத் கச்சிபல்லி மருத்துவமனையில் கணவரை சேர்த்தார். தொடர்ந்து, தனக்குத் தெரிந்தவர்கள் மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் பணத்தை திரட்ட முடிவு செய்தார்.

இதற்கிடையில், தங்களது கிராமத்தில் இரவு-பகல் பார்க்காமல் அயராது மருத்துவ சேவை புரிந்த பாஸ்கர் ராவ் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார் எனும் தகவல் கரஞ்சேடு கிராம மக்களுக்குத் தெரியவந்தது. இதுகுறித்து கிராம மக்கள் ஆலோசித்து மருத்துவருக்கு உதவி செய்ய முடிவு செய்தனர். அதன்படி, பலர் தங்களால் முடிந்த அளவு பணத்தை கொடுத்தனவர். பலர் தங்களின் அவசிய செலவுக்காக சேமிப்பில் இருந்த பணத்தையும் கூட மருத்துவரின் உயிர் காக்க கொடுக்க முன் வந்தனர். அதன்படி 20 லட்சம் ரூபாய் வரை அந்த கிராம மக்கள் திரட்டினர். அவற்றை மருத்துவர் பாக்கியலட்சுமியிடம் கொடுத்து, இந்த பணத்தை வைத்துக்கொண்டு மருத்துவ செலவை கவனிக்குமாறு கூறினர். கிராம மக்களின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மருத்துவர் பாஸ்கர் ராவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறித்து ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தெரியவந்தது. அவர், மருத்துவர் பாஸ்கர் ராவின் சிகிச்சைக்கு ஆகும் மொத்த செலவையும் மாநில அரசே ஏற்கும் என் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து பாஸ்கர் ராவுக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

Must Read : தரிசு நிலம் பொன் விளையும் நிலமாக மாறிய அதிசயம் - தள்ளாத வயதிலும் தன்னம்பிக்கையுடன் மரம் வளர்க்கும் தம்பதி!

‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பது போல மருத்துவர் பாஸ்கர் ராவ் மக்களுக்குச் செய்த தன்னலம் பாராத உதவி அவருக்கு துணையாக அமைந்துள்ளது.
Published by:Suresh V
First published: