விஜயகாந்த்துக்கு கொரோனா - மருத்துவமனை தகவல்

விஜயகாந்த்துக்கு கொரோனா - மருத்துவமனை தகவல்
விஜயகாந்த்
  • News18 Tamil
  • Last Updated: September 24, 2020, 11:39 AM IST
  • Share this:
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. எனினும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று சற்றும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது கடந்த 6 மாதங்களில் தமிழகத்தில் மட்டும் 5.58 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 5 லட்சம் பேர் குணமடைந்த நிலையில், 9010 பேர் உயிரிழந்துள்ளனர்.

அண்மை காலமாக கொரோனா தொற்றுக்கு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த வரிசையில் தேமுதிக நிறுவனத்தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த்துக்கு கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி சோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தொற்று இருந்தது தெரியவந்துள்ளது.


இந்நிலையில், விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவர் கூடிய விரைவில் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்ப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

முன்னதாக விஜயகாந்த்துக்கு வழக்கமான மருத்துவமனை பரிசோதனை நடத்த மருத்துவமனை வந்ததாகவும், அப்போது லேசான கொரோனோ அறிகுறி இருந்ததாகவும், தற்போது பூரண குணமடைந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தது.

கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தார். அவருக்கு மனைவி பிரேமலதா கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
First published: September 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading