அரசுப்பள்ளிகளில் விஜயதசமி அட்மிஷன் உண்டு.. தொடக்கக் கல்வித்துறை அறிவிப்பு..

அரசுப்பள்ளிகளில் விஜயதசமி அட்மிஷன் உண்டு.. தொடக்கக் கல்வித்துறை அறிவிப்பு..

விஜயதசமி அட்மிஷன்

5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில், விஜயதசமி அன்று சேர்க்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

 • Share this:
  வரும் 26-ஆம் தேதி விஜயதசமி அன்று அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கலாம் என்று தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது. சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை, விஜயதசமி அன்று தொடக்கப்பள்ளிகளில் சேர்க்க விரும்புவர். இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது.

  இந்நிலையில், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில், விஜயதசமி அன்று சேர்க்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

  ALSO READ |  ஆண் குழந்தைகளுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

  அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக விளம்பர அறிவிப்புகளைச் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  Published by:Sankaravadivoo G
  First published: