• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • நாட்டிலேயே முதன்முறையாக சென்னையில் கொரோனோ தொடர் கண்காணிப்பு மையம் - என்னென்ன வசதிகள்...?

நாட்டிலேயே முதன்முறையாக சென்னையில் கொரோனோ தொடர் கண்காணிப்பு மையம் - என்னென்ன வசதிகள்...?

அமைச்சர் விஜயபாஸ்கர்

அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்தியாவில் முதல் முறையாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனோ தொடர் கண்காணிப்பு மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார் 

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனோ தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளுக்கு மட்டுமே ஆளாவதாக இதுவரை மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபகாலமாக  தொற்றிலிருந்து குணமாகும் பலருக்கு நிமோனியா ,இருதய பிரச்சனை , சிறுநீரகங்கள் ,கல்லீரல் ,ரத்த நாளங்கள் மற்றும் மூளை நரம்பியல் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளும் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் முதல் முறையாக சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் பரிசோதனை செய்ய கொரோனா தொடர் கண்காணிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தை தொடங்கி வைத்த பின் பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இந்தியாவில் முதல்முறையாக கொரோனா தொடர் கண்காணிப்பு மையம் சென்னையில் தொடங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாகவும். அதில் 10 முதல் 15 சதவிகிதம் பேருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஐசியூவில் சிகிச்சை பெற்றவர்கள் இந்த மையத்தில் பரிசோதனை செய்யலாம் என தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் எந்த மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றிருந்தாலும், சிகிச்சைக்கு பின் 4 வாரங்கள் கழித்து இந்த மையத்தை அனுகி பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும் சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரையிலும் கொரோனா தொடர் கண்காணிப்பு மையப் அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்..

கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணியித்ததை விட அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவனையின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், தனியார் மருத்துவமனைகள் சேவை மனப்பான்மையுடன் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Also read... கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பிற மாவட்டங்களிலிருந்து சென்னை திருப்பியவர்கள் ஒரு லட்சம் பேர் - அமைச்சர் பாண்டியராஜன்

மேலும், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவரும் எம்.பி வசந்தகுமாரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.



கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், ஒரிடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு செல்வதால் நோய் பரவும் என கருத கூடாது என்றும் வெளியூர்களுக்கு செல்லும் மக்கள் அரசின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: