கொரோனா: வீடியோ காலில் விஜய், அனிருத், மாளவிகா மோகனன்!

கொரோனா: வீடியோ காலில் விஜய், அனிருத், மாளவிகா மோகனன்!
மாஸ்டர் டீம்
  • Share this:
கொரோனா பரவுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில் மாஸ்டர் படக்குழு சமூக இடைவெளியை கடைபிடித்து வருவதாக மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இதுவரை 29 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வைரஸ் பரவி வருவதைத் தடுக்க நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படும் நிலையில், வீட்டுக்குள்ளேயே இருக்கவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், வெளிநாட்டுக்குச் சென்றவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


இந்நிலையில் நடிகர் விஜய் உள்ளிட்ட மாஸ்டர் படக்குழுவினர் சமூக இடைவெளியை கடைபிடித்து வருவதாக நடிகை மாளவிகா மோகனன் கூறியுள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்திருக்கும் அவர், “பிரச்னை வரும் போகும்... கொஞ்சம் ரிலாக்ஷா இருங்க... எப்போது உண்மையில் வெளியில் போகமுடியவில்லையோ.. அப்போது நாங்கள் இப்படி?. சமூக இடைவெளியில் மாஸ்டர் குழு... நீங்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் படிக்க: ‘தல வீட்டில இருக்காரு... நீங்களும் இருங்க’ - திமுக எம்.எல்.ஏ வேண்டுகோள்!First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்