கொரோனா வைரஸ் பாதித்தவரின் நுரையீரல் இப்படி தான் இருக்கும்... மருத்துவர் வெளியிட்ட வீடியோ

கொரோனா வைரஸ் பாதித்தவரின் நுரையீரல் இப்படி தான் இருக்கும்... மருத்துவர் வெளியிட்ட வீடியோ
கொரோனா பாதிக்கபட்டவரின் நுரையீரல்
  • Share this:
கொரோனா வைரஸ் நோயாளியின் நுரையீரல் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை வீடியோவாக மருத்துவர் வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்து மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் தடம்படித்துள்ளது. சீனாவிற்கு அடுத்தப்படியாக இத்தாலி, ஈரான், தென்கொரிய, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸால் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும் 23,976 பேர் உயிரிழந்தும் உள்ளனர். சீனாவை விட இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாகும்.. இந்தியாவில் கொரோனா வைரஸால் 753 பாதிக்கப்பட்டும், 20 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.


அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. நாளுக்கு நாள் அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1295-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸின் பாதிப்பை மக்கள் உணர வேண்டுமென்பதற்காக வாஷிங்டன் டி.சி மருத்துவமனை வைரஸ் தொற்றால் பாதித்தவரின் நுரையீரல் பாதிப்பை 3டி வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.நுரையீரல் பாதிப்பினை ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவமனையின் தொராசி அறுவை சிகிச்சை தலைவர் கீத் மோர்ட்மேன் விளக்கமாக எடுத்துரைக்கிறார். அதில், “உயர் இரத்த அழுத்தம் கொண்ட ஆரோக்கியமான 59 வயது ஆண் ஒருவரின் நுரையீரல் பாதிப்படைந்த பின் எப்படி செயல்படுகிறது என்பதை விளக்குகிறது. நோயாளி மூச்சு விடவே சிரமமப்பட்டு அவருக்கு உதவ ஒரு வெண்டிலேட்டர் தேவைப்படுகிறது.

மேலும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் பகுதிகள் நுரையீரல் பாதிக்கப்பட்ட மற்றும் வீக்கமடைந்த இடங்களை குறிக்கிறது. கொரோனா வைரஸ் பரவும் போது நுரையீரல், தொற்றை எதிர்கொள்ள போராடும் நிலை ஏற்படுகிறது. தொற்று பரவ தொடங்கினால் மற்ற இடங்களிலும் அதன் வீரியம் அதிகரிக்க செய்கிறது. இளம்வயது நோயாளிகள் கூட தொற்று எவ்வளவு விரைவாக உள்ளது என்பதை காட்டுகிறது. ஆரோக்கியமான நுரையீரல் கொண்ட நோயாளி ஒருவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தால் மஞ்சள் நிறம் இல்லை என்கிறார் மோர்ட்மேன்.


கொரேனா வைரஸால் நுரையீரல் இதுப்போன்று பாதிக்கப்பட்டால் மீண்டும் குணமடைய நீண்ட நாட்கள் ஆகலாம் என்கின்றனர். மக்கள் இந்த வீடியோவை பார்த்து கொரோனா தொற்று எதுப்போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கொரேனா தொற்றை மக்கள் தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: March 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading