கொரோனா வைரஸ் நிபுணர்களுக்கு அனுமதி மறுப்பு: சீனா மீது உலகச் சுகாதார அமைப்பு கடும் அதிருப்தி
உலகச் சுகாதார அமைப்பே சீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்தார்.

உலகச் சுகாதார அமைப்பின் தலைவர்.
- News18 Tamil
- Last Updated: January 6, 2021, 11:22 AM IST
கொரோனா வைரஸ் எங்கு தொடங்கியது எப்படி தொடங்கியது என்பதை ஆய்வு செய்யும் நிபுணர்கள் குழுவுக்கு சீனா அனுமதி மறுத்ததால் உலகச் சுகாதார அமைப்பு கடும் ஏமாற்றமும் அதிருப்தியும் அடைந்துள்ளது.
உலகச் சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கேப்ரியேசஸ் நிபுணர்கள் குழுவை சீனா தடுப்பதாக புகார் எழுப்பியுள்ளார்.
இந்த வாரத்தில் 10 நிபுணர்கள் கொண்ட குழு சீனாவுக்கு வந்து கொரோனா ஆரம்பம் குறித்த விசாரணைகளை தொடங்கவிருந்தது. ஆனால் சீனா கொரோனாவின் மூலம் என்னவென்பதைக் கண்டறிவதில் அரசியல் இருப்பதாகக் கூறி அந்த ஆய்வுக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. சீனாவின் வூஹானில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஆரம்பித்ததாகக் கூறப்படும் கொரோனா வைரஸுக்கு இது வரை உலகம் முழுதும் 1.8 மில்லியன் மக்கள் பலியாகி உள்ளனர். உலகப் பொருளாதாரமே மீளாத்துயருக்குச் சென்று விட்டது.
சீனா இது மனிதனிலிருந்து மனிதருக்கு பரவும் கொடிய தொற்று வைரஸ் வகை என்பதை உலக நாடுகளிடமிருந்து மறைத்து விட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் குற்றச்சாட்டை முன் வைத்தன.
உலகச் சுகாதார அமைப்பே சீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்தார்.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொரோனாவை ‘சீனா வைரஸ்’ என்று குறிப்பிட்டது பெரிய சர்ச்சைகளையும் சீனா - அமெரிக்கா இடையே கடும் வார்த்தை மோதல்களையும் பொருளாதார மோதல்களையும் ஏற்படுத்தியது.
ஆனால் சீனாவோ இது அமெரிக்க ராணுவத்தின் மூலம் சீனாவுக்குள் ஊடுருவியது என்று பதில் குற்றச்சாட்டை எழுப்பியது.
இந்நிலையில் கொரோனா தொடக்கத்தை அறியும் குழு சீனாவுக்கு புறப்பட்டுள்ள நிலையில் அவர்கள் உள்ளே நுழைய அனுமதி மறுத்துள்ளது சீனா.
இது தொடர்பாக உலகச் சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் கூறும்போது, “சீனாவுக்குள் நிபுணர்கள் குழு நுழைவதற்கு சீனா அனுமதி தரவில்லை என்பதை அறிகிறோம்.
இந்தச் செய்தி எனக்கு பெரிய ஏமாற்றமளிக்கிறது. சீனா உறுதியளித்து பின் வாங்கியுள்ளது” என்றார் வேதனையுடன்.
உலகச் சுகாதார அமைப்பின் அவசரகாலங்களுக்கான இயக்குநர் மைக்கேல் ரயான் கூறும்போது, விசாக்கள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை என்றார். எனவே இது நடைமுறை சிக்கல்தான் என்று அறிகிறோம் விரைவில் இது தீர்ந்து அனுமதி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
வவ்வால்கள் மூலம் கொரோனா பரவுகிறது என்று விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் தெரிவித்தனர், ஆனால் வவ்வாலிலிருந்து மனிதர்களுக்கு அது பரவக் காரணமாக இருக்கும் இடைநிலை வைரஸ் தாங்கி எது என்று தெரியவில்லை என்றே விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர்.
உலகச் சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கேப்ரியேசஸ் நிபுணர்கள் குழுவை சீனா தடுப்பதாக புகார் எழுப்பியுள்ளார்.
இந்த வாரத்தில் 10 நிபுணர்கள் கொண்ட குழு சீனாவுக்கு வந்து கொரோனா ஆரம்பம் குறித்த விசாரணைகளை தொடங்கவிருந்தது. ஆனால் சீனா கொரோனாவின் மூலம் என்னவென்பதைக் கண்டறிவதில் அரசியல் இருப்பதாகக் கூறி அந்த ஆய்வுக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.