முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரோஜாப்பூ - அன்பை வெளிப்படுத்தி கொரோனா விழிப்புணர்வு வழங்கிய வேலூர் காவல்துறை

வேலூரில் நூதனமான முறையில் கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

  • Share this:
வேலூரில் வீடு வீடாகச் சென்று இலவசமாக முகக்கவசங்கள், ரோஜா பூக்கள் வழங்கி முகக்கவசம் அணிவது குறித்து நூதனமான முறையில் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், தெற்கு காவல்துறையின் சார்பில் காவல் ஆய்வாளர் லதா தலைமையில் காவல்துறையினர் சாலையில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களைத் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு ரோஜாப் பூ கொடுத்து அறிவுரை வழங்கி, கொரோனா பரவாமல் இருக்க அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Also read: நகைச்சுவை நடிகர் கிங்காங்கின் ஆசையை நிறைவேற்றிய ரஜினிகாந்த்

இதேபோன்று, சாலையோரம் உள்ள ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கியதுடன், ஏழை எளிய கூலித்தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியான வேலூர் ஆர்.எஸ்.நகர் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வீட்டில் உள்ளவர்களுக்கு முகக்கவசமும் ரோஜாப் பூக்களையும் கொடுத்து நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
First published: October 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading