திருமழிசை மார்க்கெட்டால் கடும் அவதி; கோயம்பேட்டிலேயே இடம் ஒதுக்குங்கள் - வியாபாரிகள் திடீர் போராட்டம்

கோயம்பேடு சந்தையில் உள்ள ஒரு பகுதியை கடைகள் அமைப்பதற்காக ஒதுக்கித் தரவேண்டும் என்று காய்கறி வியாபாரிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமழிசை மார்க்கெட்டால் கடும் அவதி; கோயம்பேட்டிலேயே இடம் ஒதுக்குங்கள் - வியாபாரிகள் திடீர் போராட்டம்
திருமழிசை காய்கறி சந்தை
  • Share this:
கோயம்பேடு சந்தை கொரோனா பரவல் மையமாக மாறியதன் காரணமாக காய்கறி சந்தை தற்போது திருமழிசையில் செயல்பட்டு வருகிறது. இங்கு 200 கடைகள் அமைக்கப்பட்டு மொத்த வியாபாரத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. லாரிகள் ஒரே நேரத்தில் வந்து செல்வதற்கு வசதியின்மை, மழை பெய்தால் சகதி நிரம்பும் மார்க்கெட் பகுதி என பல்வேறு சிரமங்களால் அவதிப்பட்டு வந்த வியாபாரிகள், நேற்று திடீரென வாகனங்களை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Also read: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து மருத்துவர்கள் போராட்டம்

பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், இன்று மீண்டும் திருமழிசையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் கோயம்பேட்டின் ஒரு பகுதியை கடைகள் அமைக்க ஒதுக்கித் தரவேண்டும் என்று காய்கறி வியாபாரிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
First published: July 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading